
கீழ்கண்ட பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. ஆப்லைன் (Offline) மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022 ஆகும்.
பட்டப்படிப்பு மற்றும் மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையப்படிப்பு ( MS Office ) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். கணினி அறிவியல் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிக பட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாதம் ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.08.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இதுபற்றி மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !