
இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அவை,
• ஆலோசகர் (Consultant - Yoga & Naturopathy Doctor) - 3 இடங்கள்: மாதம் ரூ. 40,000 ஊதியம். BNYS பட்டம் பெற்று, தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
• பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Attender) - 3 இடங்கள்: மாத ஊதியம் ரூ. 10,000. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு குறைவான கல்வித் தகுதி. தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
• சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant) - 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2): மாத ஊதியம் ரூ. 15,000. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தற்காலிகப் பணியிடங்கள் கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகளில் ஒதுக்கப்பட்டுள்ளன:
தேசிய ஆயுஷ் திட்டம் (National Ayush Mission - NAM):
• அரசு மருத்துவமனை, பாபநாசம்: ஆலோசகர் (1), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (1)
• அரசு மருத்துவமனை, ஒரத்தநாடு: ஆலோசகர் (1), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (1)
• அரசு மருத்துவமனை, திருவிடைமருதூர்: ஆலோசகர் (1), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (1)
• அரசு மருத்துவமனை, பேராவூரணி: சிகிச்சை உதவியாளர் (ஆண்-1, பெண்-1)
Musculoskeletal Disorder திட்டம்:
• GPHC, வல்லம்: சிகிச்சை உதவியாளர் (ஆண்-1)
• GPHC, நடுக்காவேரி: சிகிச்சை உதவியாளர் (பெண்-1)
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை, 11 மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும். 11 மாதங்கள் முடிந்ததும், ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இந்த பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாது.
விண்ணப்பதாரர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரியான https://thanjavur.nic.in என்ற வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.09.2025 அன்று மாலை 5.00 மணிக்குள். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட நல்வாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது.