5,547 காலியிடங்களை நிரப்ப உள்ள எஸ்பிஐ வங்கி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Ramya sFirst Published Jan 19, 2024, 2:49 PM IST
Highlights

எஸ்பிஐ வங்கி விரைவில் நிரப்பப்பட உள்ள சிபிஓ அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது  பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்து ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் தற்போது 5,447 சிபிஓ (Circle Based Officers) காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்பிஐ வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

அதன்படி நவம்பர் 22, 2023 முதல் டிசம்பர் 17, 2023 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 21-ம் தேதி இந்த பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த தேர்வுக்கான அனுமதி அட்டையையும் எஸ்பிஐ வங்கி வெளியிட்டது.

 

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ..

இந்த நிலையில் சிபிஓ அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். வட்ட அடிப்படையிலான அதிகாரிகள் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு போட்டி இழப்பீட்டுத் தொகுப்புகள், பலன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைத்தன்மை உள்ளிட்ட பல சலுகைகளை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது.

அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் I-ன் படி, ரூ.36,000அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். அடிப்படை சம்பளம் மட்டுமில்லை, தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு கூடுதல் சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பள அளவு, அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள், பிடித்தம் செய்யப்படும் தொகை, மொத்த இழப்பீடு, நிகர சம்பளம் மற்றும் பிற கூறுகள் அனைத்தும் SBI வட்டம் சார்ந்த அதிகாரி சம்பள அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன

வட்டம் சார்ந்த அதிகாரியின் சம்பள அமைப்பு இதோ :

ஊதிய அளவு - ரூ 36,000 முதல் ரூ63,840 வரை இருக்கும்

அடிப்படை ஊதியம் - ரூ 36,000

அகவிலைப்படி - ரூ.16,884

வீட்டு வாடகை கொடுப்பனவு - ரூ 2,520

நகர இழப்பீடு கொடுப்பனவு - ரூ 1,080

மற்ற கொடுப்பனவுகள் - ரூ 2,000

மொத்த சம்பளம் - ரூ 58,000

பிடித்தம் செய்யப்படும் தொகை - ரூ 8,100

நிகர சம்பளம் - ரூ 50,000

மூத்த அதிகாரிகளால் வழங்கப்படும் அனைத்து பணிகளும் வட்ட அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் செய்யப்பட வேண்டும்.

ஐடிஐ படித்தவர்களா நீங்கள்? அப்படினா செம சான்ஸ்.. அரசு வேலையில் ரூ.71,000 வரை சம்பளம்..!

வட்ட அதிகாரிகளின் வேலை விவரம்

  • பிரதான கிளையின் செயல்பாடுகளை நிர்வகிப்பது
  • வாடிக்கையாளர்களுடன் நல்லுறவைப் பேணுவது
  • அனைத்து கொள்கைகளும் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது
  • கடன்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் வங்கியில் செயல்படும் செயல்பாடுகளை கண்காணிப்பது
click me!