சொன்னா நம்பமாட்டீங்க.. எழுத படிக்கத் தெரிந்தாலே போதும்.. மாதம் ரூ.50.000 வரை சம்பளம்..!

By vinoth kumar  |  First Published Jan 2, 2024, 11:28 AM IST

தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவுக்காவலர் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதற்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

பணியிட விவரம் :

 மண்டபம் மற்றும் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சிஅலுவலகத்தில் அலுவலக உதவியாளர் 01 மற்றும் இரவு காவலர் 01 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கல்வித்தகுதி : 

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக்காவலர் பணிக்கு எழுத படிக்க தெரிந்தாலே போதும்.

ஊதிய விபரம்: 

ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை

வயது வரம்பு : 

பொதுப் பிரிவினர்:  18 -32 , ஓபிசி பிரிவினர்:  18 - 34, ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 18 -37

விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வி, இருப்பிட சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 

ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஊராட்சி ஒன்றியம், திருவாடானை. இராமநாதபுரம் மாவட்டம் - 623 407

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

இராமநாதபுரம் மாவட்ட இணையதளத்தில்  https://ramanathapuram.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

click me!