TRB Exam: பட்டதாரி ஆசிரியர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? எப்போது தெரியுமா?

Published : Dec 27, 2023, 12:54 PM ISTUpdated : Dec 27, 2023, 12:58 PM IST
TRB Exam:  பட்டதாரி ஆசிரியர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? எப்போது தெரியுமா?

சுருக்கம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழ் பாடத்துக்கு 371 பணியிடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கு 214 பணியிடங்கள், கணிதப் பாடத்துக்கு 200 பணியிடங்கள், இயற்பியல் பாடத்துக்கு 274 பணியிடங்கள், வேதியியல் பாடத்துக்கு 273 பணியிடங்கள், வரலாறு பாடத்துக்கு 346 பணியிடங்கள் உள்பட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என கடந்த 22ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது மட்டுமின்றி வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஜனவரி 7ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 03 / 2023 மற்றும் 03A / 2023ன் படி 07.01.2024 அன்று நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் (BT / BRTE) தேர்வானது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. 

மேற்கண்ட தேர்வானது வருகின்ற 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 07.012024 அன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்விற்க்கான நுழைவு சீட்டினை 04.02.2024 அன்று நடைபெறவிருக்கும் தேர்விற்கு பயன்படுத்தலாம் என விண்ணப்பதாரர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Govt Jobs: அரசு சட்டப்பணிக்கு நேரடி வாய்ப்பு! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!