99.14% மார்க் எடுத்து அசத்தி இருக்கும் புல்கிட IIM அகமதாபாத் அல்லது மேலாண்மை ஆய்வுகள் (FMS) டெல்லியில் சேரத் திட்டமிட்டுள்ளார்.
கேட் 2023 தேர்வு முடிவுகள் டிசம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்டன. அதில் 14 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தத் தேர்வில் புல்கிட் என்ற இளம் உணவு பிளாகர் 99.14 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
புல்கிட் இன்ஸ்டாகிராம் மற்றும் யடியூப் இரண்டிலும் உணவு சேனலை நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவரது பக்கத்தை 1.15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவரது யூடியூப் பக்கத்தில் 4.78 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கஃபே மற்றும் உணவகங்கள் முதல் வீட்டு சமையல் வரை பலவகை உணவுகளைச் செய்து காட்டுகிறார் புல்கிட்.
undefined
"இன்ஸ்டாகிராமில், ஆரம்பத்தில், நான் கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் உணவு தயாரிப்பதைப் பதிவிடுவேன். ஆனால் லாக்டவுன் நேரத்தில் வெளியே செல்ல முடியாததால், என் அம்மாவுடன் சமையல் செய்ய ஆரம்பித்தேன். நாங்கள் கேரமல் கஸ்டர்ட் செய்து வீடியோ வெளியிட்டோம். அதை கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பார்த்தனர். அந்த நேரத்தில் என் சேனலை 10,000 பேர் மட்டுமே பின்தொடர்பவர்களாக இருந்தார்கள். அந்த வீடியோ எனக்கு திருப்புமுனையாக இருந்தது" என்கிறார் புல்கிட்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5,860 ஆக உயர்வு; புதிதாக 620 இடங்கள்!
எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருந்தாலும், உணவு, ஃபேஷன் போன்றவற்றில் சமூக ஊடகப் பக்கங்களை நடத்துவது ஒரு சவாலான பணியாகும். நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயல்பட நிறைய நேரம் செலவிட வேண்டும். கொஞ்சம் உந்துதலும் தேவைப்படுகிறது என்றும் புல்கிட் தெரிவிக்கிறார்.
"ஆரம்பத்தில் இருந்தே நான் உணவு தொடர்பான வீடியோவில் ஆர்வமாக இருந்தேன். ஆரம்பம் தான் மிகவும் கடினமான பகுதி என்று நினைக்கிறேன். இறுதியில், மக்களின் பாராட்டு கிடைக்கத் தொடங்கியது" என்று சேனல் தொடங்கிய காலத்தை நினைவுகூர்கிறார்.
புல்கிட் 12ஆம் வகுப்பில் வணிகப் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். அதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் படிப்பில் (BMS) இளங்கலைப் பட்டம் பெற்றார். 2019இல், அவர் கேட் (CAT) தேர்வை எழுதினார். ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெற்றும் தான் விரும்பிய ஒரு நிறுவனத்தில் சேர முடியவில்லை.
இதனால், மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் CAT 2023 தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். இப்போது 99.14% மார்க் எடுத்து அசத்தி இருக்கும் புல்கிட IIM அகமதாபாத் அல்லது மேலாண்மை ஆய்வுகள் (FMS) டெல்லியில் சேரத் திட்டமிட்டுள்ளார். மேலும் எதிர்காலத்தில் உணவுத் துறையில் இறங்குவார் என்று நம்புகிறார்.
அயோத்திக்கு கடவுளின் அழைப்பு யாருக்கு? சூடுபிடிக்கும் ராமர் கோயில் திறப்பு விழா சர்ச்சை