TNPSC Group 4 Results: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வரப்போகுது.. சரிபார்ப்பது எப்படி?

By Raghupati R  |  First Published Jul 22, 2024, 12:17 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வை (குரூப்-IV சேவைகள்) நடத்தியது மற்றும் விரைவில் முடிவுகளை வெளியிட எதிர்பார்க்கிறது. அறிவிப்பைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இல் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழக அரசின் பல்வேறு நிறுவனங்களில் சுமார் 6000 குரூப் 4 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வு ஒரே ஷிப்டில் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 15.8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?

முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை அளித்து அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in ஐப் பார்வையிடவும். முடிவுகள் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து, குரூப் 4 முடிவுகள் இணைப்பை கிளிக் செய்யவும். கேட்கும் தகவலை பதிவிட்டு குரூப் 4 முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

click me!