
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், எதிர்வரும் 2025ம் நிதியாண்டில், சுமார் 15,000 முதல் 20,000 நபர்களை (Freshers) பணியமர்த்தவுள்ளது. இது இந்த ஆண்டில் மிகப்பெரிய வறட்சியை சந்தித்த IT துறைக்கும், இந்த கல்வியாண்டில் வரவிருக்கும் கல்லூரி பட்டதாரிகளுக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொண்டுவருகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 50,000 பேரை இன்போசிஸ் நிறுவனம் பணியமர்த்திய நிலையில், இந்த ஆண்டு அது சுமார் 76 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்து, 2024ம் நிதியாண்டில் அந்நிறுவனம் வெறும் 11,900 பேரை தான் பணியமர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஜூலை 18 அன்று நடந்த இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் மாநாட்டில் பேசிய தலைமை நிதி அதிகாரி (CFO) ஜெயேஷ் சங்க்ராஜ்கா பின்வரும் தகவல்களை அளித்தார்.
7th Pay Commission: 27 % சம்பள உயர்வு.. ஆகஸ்ட் 1 முதல் கிடைக்கும்.. அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
“கடந்த பல காலாண்டுகளில் நாங்கள் இளைஞர்களை பணியமர்த்துவதில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தோம்.கேம்பஸ் இன்டெர்வியூ மூலம், வெளியில் இருந்தும் நங்கள் இந்த முறை பல இளைஞர்களை எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்துள்ளோம். மேலும் "நாங்கள் எவ்வாறு வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறோம் என்பதை பொறுத்து இந்த ஆண்டு 15,000-20,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு வருகின்றோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவின் பபிரபல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில், எதிர்வரும் 2025ம் நிதியாண்டில், சுமார் 40,000 புதியவர்களை (Freshers) பணியமர்த்தவுள்ளது. அவர்களில் ஏற்கனவே முதலாம் காலாண்டிற்காக 11,000 பயிற்சியாளர்களை அந்நிறுவனம் தேர்வுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் காலாண்டில் இருந்து, இன்ஃபோசிஸின் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது காலாண்டில் குறைந்துள்ளது. அதே போல ஒப்பீட்டளவில், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் நிகர அடிப்படையில் 5,452 ஊழியர்களை வேலையில் சேர்த்துள்ளது. இருப்பினும், டிசிஎஸ்-ன் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று சரிவை தான் சந்தித்துள்ளது
மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!