Training: அட்டகாசமான வாய்ப்பு.! 8th முடித்திருந்தால் போதும்.! ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.!

Published : Dec 05, 2025, 07:09 AM IST
industrial training

சுருக்கம்

08.12.2025 அன்று பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. ITI, 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று, உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சியைப் பெறலாம்.

பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 

வேலைவாய்ப்பு என்பது இன்றைய இளைஞர்களின் முதன்மை தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. திறன் மேம்பாட்டின் மூலம் தொழில்துறை அனுபவம் பெறும் வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான தொழிற்பழகுநர் திட்டம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் அனுபவத்தையும் வழங்குவதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பயிற்சி முகாம் தேதியை தெரிஞ்சுக்கோங்க

அத்தகைய சூழலில், திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.12.2025 (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததின்படி, அரசு மற்றும் தனியார் தொழிற்துறைகள் இதில் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளன. தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திரமாக ரூ.10,560 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 

கல்வித்தகுதி இதுதான்

தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத ITI தேர்ச்சி பெற்றவர்கள், 8ம், 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட நாளில் நேரடியாக வருகை தரலாம். மேலும் விவரங்களுக்கு 0451-2970049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இளைஞர்கள் தங்களின் தொழில் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும், வேலை அனுபவம் பெறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளலாம். மேலும் பல இளைஞர்கள் இந்த திட்டத்தின் பயனை அடைந்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Vacancy: ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை காத்திருக்கு.! எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?
வேலைப்பளு குறையணுமா? கூகுள் வொர்க்ஸ்பேஸில் ஜெமினியை இப்படி யூஸ் பண்ணுங்க - பாஸ் பாராட்டுவார்!