போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு..10 வது படித்திருந்தால் போதும்.. எப்படி விண்ணப்பிக்கலாம்..?

By Thanalakshmi V  |  First Published Jul 25, 2022, 6:53 PM IST

அண்ணாசாலையில் உள்ள முதன்மை  தபால் அலுவலகத்தில் ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. 
 


சென்னை அண்ணாசாலையில் உள்ளிட்ட முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28 ஆம் தேதி அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் / ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முக தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 50 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படித்து வேலைவாய்ப்பு இல்லாத/சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் இந்த விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. TNPSC வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !

மேலும் கணினி அறிவு மற்றும் உள்ளூர் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெறாதவர்கள் ஆவர். வரும் 28 ஆம் தேதி அண்ணாசாலையில் உள்ள முதன்மை  தபால் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். 

மேலும் நேர்காணலுக்கு வருவோர் தங்களின் தன் விவரக்குறிப்பு, புகைப்படங்கள், வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ் (ஏதாவது இருப்பின்) ஆகியவற்றுடன் ஊஆண் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் 5000 ரூபாய் ரொக்கத்தை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:அலர்ட் !! TET தேர்விற்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வு வாரியம்..

click me!