ஒஎன்ஜிசி காலியாக உள்ள 871 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இங்கே

By Thanalakshmi V  |  First Published Sep 26, 2022, 6:19 PM IST

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்: ONGC

காலியிடங்கள்: 871

Tap to resize

Latest Videos

பணியின் பெயர் மற்றும் விவரங்கள்: 

AEE சிமெண்ட்டிங் - மெக்கானிக்கல்: 13

AEE  சிமெண்ட்டிங்  - பெட்ரோலியம் - 4

AEE சிவில் - 29

AEE ட்ரில்லிங்-மெக்கானிக்கல் - 121

AEE ட்ரில்லிங் -பெட்ரோலியம் - 20

AEE எலக்ட்ரிக்கல் - 101

AEE  எலக்ட்ரானிக்ஸ்  - 22

AEE(இன்ஸ்ட்ருமென்டேஷன் ) - 53

AEE (மெக்கானிக்கல்) - 103

AEE (உற்பத்தி )-மெக்கானிக்கல் - 39

AEE (உற்பத்தி) வேதியியல்) - 60

AEE (உற்பத்தி)-பெட்ரோலியம் - 32

AEE(சுற்றுச்சூழல்) - 11

AEE (நீர்த்தேக்கம்) - 33

வேதியியலாளர் - 39

புவியியலாளர் - 55

புவி இயற்பியலாளர் (மேற்பரப்பு) - 54

புவி இயற்பியலாளர் (வெல்ஸ்) - 24

நிரலாக்க அலுவலர் - 13

பொருள் மேலாண்மை அதிகாரி - 32

போக்குவரத்து அதிகாரி - 13

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் recruitment.ongc.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:tirumala tirupati:மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

கேட் தேர்வு 2022 பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட அடிப்படைத் தகுதிகளும் கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: 

கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துக் கொள்ளவும்.
 

மேலும் படிக்க:இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

click me!