இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1,535 காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Sep 26, 2022, 5:26 PM IST

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில் நிறுவனம்

காலி பணியிடங்கள்: 1,535 

Latest Videos

பணியின் பெயர்:  பிட்டர், பாய்லர், அப்பிரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர்  

பணியிடம்:  போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி:

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மகிழ்ச்சி செய்தி !! ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி ரயில்களில் புதிய வசதி அறிமுகம்..

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மூலம் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி நவம்பர் 6 ஆம் தேதி இதற்கான எழுத்து தேர்வு நடைபெறும் என்றும் உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துதேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர் சான்றிதழ்க் சரிபார்க்கு அழைக்கபடுவர். அதன்படி நவ.28 முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை சான்றிதழ்  சரிபார்ப்பு நடைபெறும் என்று உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி காலம் : 
 
பாய்லர்( மெக்கானிக்கல்) -  24 மாதங்கள்

அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி - 15 மாதங்கள்

இதர பணிகள் - 12 மாதங்கள்.

முக்கிய குறிப்பு: 

கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:tirumala tirupati:மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்

click me!