
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (National High Speed Rail Corporation Limited - NHSRCL) ஆனது, 36 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால் நாடு முழுவதும் உள்ள தகுதியான இந்தியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Assistant Technical Manager (S&T) மற்றும் Junior Technical Manager (S&T) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2025 ஆகும்.
கல்வி தகுதி மற்றும் சம்பளம்!
• பணியின் பெயர்: Assistant Technical Manager (S&T)
காலியிடங்கள்: 18
சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
• பணியின் பெயர்: Junior Technical Manager (S&T)
காலியிடங்கள்: 18
சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள், PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள், PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள் என வயது வரம்பு தளர்வுகள் உண்டு. விண்ணப்பக் கட்டணமாக, பெண்கள், SC/ST, PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ.400/- செலுத்த வேண்டும்.
தேர்வு முறை மற்றும் முக்கிய தேதிகள்!
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஸ்கிரீனிங் செய்தல், ஆவண சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது சிறப்பம்சம்.
• விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.08.2025
• விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் NHSRCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nhsrcl.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.