சென்னையில் உள்ள அஞ்சல் மோட்டார் சேவை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சென்னை, அஞ்சல் மோட்டார் சேவையில் கார் டிரைவர் பணியிடங்கள் அஞ்சல் துறை, அஞ்சல் மோட்டார் சேவை, சென்னை தமிழ்நாடு வட்டத்தில் ஸ்டாஃப் கார் டிரைவர் (சாதாரண தரம்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகளின் எண்ணிக்கை : 58
பணி விவரம் : பணியாளர் கார் டிரைவர்
கல்வித்தகுதி : 10வது தேர்ச்சி. ஓட்டுநர் உரிமத்துடன் 3 வருட அனுபவம். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு.
வயது வரம்பு : 18 முதல் 27 வரை.
ஊதிய அளவு : மாதம் ரூ.19,900 - ரூ.63,200.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100(SC/ST/பெண்-ரூ.150)
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Senior Manager, Mail Motor Service, Greams Road, Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31-03-2023.
இணையதளம் : https://www.indiapost.gov.in
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் லைட் மற்றும் மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம், மோட்டார் இயந்திரங்கள் பற்றிய அறிவு (வேட்பாளர் வாகனத்தில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து அதற்கு சமமான உரிமம் வைத்திருத்தல் அவசியம்.
அஞ்சல் முகவரி :
மூத்த மேலாளர் (JAG), அஞ்சல் மோட்டார் சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை – 600006.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக 31 மார்ச் 2023க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நடைமுறைத் தேர்வு (தமிழ்நாடு அஞ்சலக பணியாளர்கள் கார் ஓட்டுநருக்கு) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேர்வு முறை விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
இதையும் படிங்க..8ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!
இதையும் படிங்க..தமிழக அரசின் TNPLல் அருமையான வேலைவாய்ப்பு.. மாதம் 31,000 சம்பளம்.. முழு விபரம் உள்ளே !!