மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 28 ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் பணிக்கு 49 பேர் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் வழங்கும் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க பணி அமர்த்தப்படுவார்கள்.
இதுகுறித்து மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் (ATVMs) மூலம் முன்பதிவு அல்லாத ரயில் டிக்கெட்டுகளை வழங்கும் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பணிக்கு காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரத்தை ரயில் நிலையங்கள் வாரிய வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 ரயில் நிலையங்களில் 49 டிக்கெட் வழங்கும் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் மதுரையில் அதிகபட்சமாக 6 இடங்கள் உள்ளன. திண்டுக்கல் திருநெல்வேலி ஆகிய இரு ரயில் நிலையங்களிலும் தலா 5 பணியிடங்கள் இருக்கின்றன.
நாசாவின் ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த புதிய கிரகம்! தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகத் தகவல்
1. மதுரை ரயில் நிலையம் - 6
2. திண்டுக்கல் ரயில் நிலையம் - 5
3. மணப்பாறை ரயில் நிலையம் - 2
4. மானாமதுரை ரயில் நிலையம் - 2
5. பரமக்குடி ரயில் நிலையம் - 1
6. புனலூர் ரயில் நிலையம் - 1
7. கொட்டாரக்கரா ரயில் நிலையம் - 1
8. திருநெல்வேலி ரயில் நிலையம் - 5
9. நாசரேத் ரயில் நிலையம் - 1
10. திருச்செந்தூர் ரயில் நிலையம் - 1
11. விருதுநகர் ரயில் நிலையம் - 2
12. கோவில்பட்டி ரயில் நிலையம் - 2
13. சாத்தூர் ரயில் நிலையம் - 2
14. சிவகாசி ரயில் நிலையம் - 2
15. சங்கரன்கோவில் ரயில் நிலையம் - 1
16. புதுக்கோட்டை ரயில் நிலையம் - 1
17. உடுமலைப்பேட்டை ரயில் நிலையம் - 1
18. பழனி ரயில் நிலையம் - 1
19. கடையநல்லூர் ரயில் நிலையம் - 1
20. கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் - 1
21. செங்கோட்டை ரயில் நிலையம் - 3
22. சேரன்மகாதேவி ரயில் நிலையம் - 1
23. கீழ புலியூர் ரயில் நிலையம் - 1
24. அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் - 1
25. பாவூர் சத்திரம் ரயில் நிலையம் - 1
26. தூத்துக்குடி ரயில் நிலையம் - 1
27. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் - 2
பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் விரைவாக டிக்கெட் வழங்கவும் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ரயில்வே தெரிவிக்கிறது. மாதிரி விண்ணப்பப் படிவம்ர பணியில் சேர்வதற்கான நிபந்தனைகள் ஆகியவற்றை அந்தந்த ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகளில் காணலாம்.
குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு அருகிலேயே வசிக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்கள் மட்டும்தான் இந்த ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறி இருப்பது கவனித்தக்க முக்கிய நிபந்தனை ஆகும். அதிலும் குறிப்பாக, குரூப் சி, குரூப் டி பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முழுமையாக நிரப்பப்பட்ட பூர்த்தி விண்ணப்பத்தை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
Sr. Divisional Commercial Manager,
Southern Railway DRM Office,
Madurai - 625016.
கூகுள் சேவைகள் முடங்கின! ஜிமெயில், யூடியூப், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சிக்கல்