சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 காலியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம்

By Raghupati R  |  First Published Mar 23, 2023, 1:34 PM IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் 19 வேலை காலியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுத்தப்படுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்ற வேலை காலியிடங்கள், பணிக்கு தேவையான வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், சம்பள விவரங்கள் போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.

அமைப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

Tap to resize

Latest Videos

பணியின் பெயர் : சிவில் நீதிபதி

வேலை இடம் : சென்னை

தகுதி : சட்டப் பட்டம்

காலியிடங்கள் : 19

தொடக்கத் தேதி : 01.03.2023

கடைசி தேதி : 01.04.2023

சென்னை உயர் நீதிமன்ற சிவில் நீதிபதி பணிக்கான அறிவிப்பு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  வேலை தேடுபவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

காலியிட விவரங்கள் : 

சிவில் நீதிபதி 19

கல்வி தகுதி : 

சிவில் நீதிபதி சட்டப் பட்டம்

வயது எல்லை :

சிவில் நீதிபதி 22 முதல் 40 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம் : 

தேர்வுக் கட்டணம்: ரூ. 2,000/-

SC/ ST/ PWD வேட்பாளர்கள்: Nil

பணம் செலுத்தும் முறை : 

ஆன்லைன்

சம்பள விவரங்கள் :

சிவில் நீதிபதி ரூ. 27,700 – 44,770/- மாதத்திற்கு

தேர்வு முறை : 

பெரும்பாலான நேரங்களில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, விவா ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யும்.

விண்ணப்பிக்கும் முறை : 

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேளைக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், சிவில் நீதிபதி வேலையைத் தேடிப் பதிவிறக்கவும். அதன் பிறகு, பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்.  இந்த விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை அணுக வேலை விண்ணப்பத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

தேவையான அனைத்து தகவல்களையும் நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்களா மற்றும் அது சரியானதா என சரிபார்க்கவும். தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

இதையும் படிங்க..மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. தமிழ்நாடு காவல்துறையில் காத்திருக்கும் அருமையான வேலை - முழு விபரம்

click me!