தமிழ்நாட்டில் சிவில் சர்வீஸ் தேர்வளர்களை ஊக்குவிக்க சிறப்பு நிதியுதவி; பட்ஜெட்டில் கவனித்தீர்களா?

By Dhanalakshmi G  |  First Published Mar 22, 2023, 11:27 AM IST

தமிழ்நாட்டில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கவனத்தில் கொண்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.


மத்திய தேர்வாணையக் குழு (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தரமான பயிற்சியை வழங்குவதுடன், மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கு நிதியுதவி மற்றும் ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். அண்ணா பணியாளர் நிர்வாகக் கல்லூரியுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஒருங்கிணைந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஆர்வலர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகள் மற்றும் அதற்கான பயிற்சி புத்தகங்களை பெறுவதற்கு உதவும் திட்டத்தை செயல்படுத்தும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும், 1,000 விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் ஒவ்வொருவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 மற்றும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மொத்தமாக ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு  (TNSDC) 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தேசிய சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதாவது உயர்கல்வி படிப்பவர்களின் தேசிய சதவீதம் 27.1 சதவீதமாக இருக்கிறது. அதுவே, தமிழ்நாட்டில் 51.4 சதவீதமாக இருக்கிறது. ஆனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3 டைடல் பூங்கா.. 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழக இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திமுக அரசு

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்வெழுதிய 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், 2014 ஆம் ஆண்டில், மாநிலத்தில் இருந்து 119 மாணவர்கள் யுபிஎஸ்சிக்கு தகுதி பெற்றனர் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி மாணவர்களை சிவில் சர்வீஸ் படிப்பதற்கு ஊக்குவிக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு, உயர்கல்வித் துறைக்கு, 6,967 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ஏறக்குறைய 1,300 கோடி ரூபாய் அதிகமாகும்.

2023-ம் ஆண்டில் மத்திய தேர்வாணையக் குழு நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான  பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சிமைய இணையதளமான  www.civilservicecoaching.com-ல் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகுதியுடையவர்கள் நவம்பர் 13ஆம் தேதி நுழைவுத் தேர்வு எழுவதற்கு அனுமதிக்கப்படுவர். நடப்பாண்டில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் துவங்கும். இதற்கான பயிற்சி வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. 

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம்-எம் ஆர் கே

click me!