சூப்பர் நியூஸ்! தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 16, 2025, 4:41 PM IST

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) நிறுவனத்தில் 518 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுரங்கம், உலோகம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது, ​​இந்திய அரசாங்கம் NALCO இல் 51.28% பங்குகளை வைத்திருக்கிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பதை பார்ப்போம். 

மொத்த காலிப்பணியிடங்கள்: 

Tap to resize

Latest Videos

518 

பணி மற்றும் காலி பணியிடங்கள் விவரம்: 

ஆய்வகம் - 37, ஆபரேட்டர் - 226 , பிட்டர் - 73 , மெக்கானிக் - 48, HEMM ஆபரேட்டர் - 9 , மைனிங் - 1, மைனிங் மேட் - 15, மோட்டார் மெக்கானிக் - 22, முதல் உதவியாளர் - 5, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு-III -2, புவியியலாளர் - 4, செவிலியர் Gr-III -7, மருந்தாளர் Gr-III - 6

கல்வித்தகுதி: 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிஎம்எல்டி, பி.எஸ்சி நர்சிங், ஜிஎன்எம், டி.பார்ம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மாத சம்பளம்: 

 ரூ.29,500 முதல் 70,000 வரை

வயது வரம்பு: 

 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.100 கட்டணத்தை ஆன்லைனில் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 

WWW.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 ஜனவரி 21

click me!