ரயில்வேயில் சூப்பர் வேலை! தேர்வு கூட எழுத வேண்டாம், மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம்!

By SG Balan  |  First Published Jul 25, 2024, 7:39 PM IST

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தில் Hospitality Monitors பணிக்கு 35 காலியிடங்கள் தரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு மாதம் ரூ. 30,000 சம்பளத்துடன் பிற சலுகைகளும் உண்டு.


இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தில் Hospitality Monitors பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள இன்டர்வியூவில் கலந்துகொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் Hospitality Monitors பணிக்கு 35 காலியிடங்கள் தரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு மாதம் ரூ. 30,000 சம்பளத்துடன் பிற சலுகைகளும் உண்டு.

Tap to resize

Latest Videos

undefined

வயதுவரம்பு:

இந்த வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யும் பொதுப் பிரிவினர் ஜூலை 1, 2024 அன்று 28 க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தங்கம் விலை தொடர்ந்து குறையுது! தங்கத்தில் முதலீடு என்ன வழிகள் இருக்குன்னு தெரியுமா?

கல்வித்தகுதி:

இந்த வேலைக்க விண்ணப்பிக்கும் நபர்கள் Hospitality and Hotel Management, Catering Technology, Tourism Management, Culinary Arts போன்ற துறைகளில் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.

தேர்வு முறை:

ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தில் Hospitality Monitors பணிக்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வு பாட்னாவில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலகத்தில் இரண்டு நாள் நடத்தப்படுகிறது. முதல் நாள் நேர்முகத் தேர்வு இன்று முடிந்துள்ளது. நாளையும் (26.7.2024) நேர்முகத் தேர்வு நடக்கிறது.

விண்ணப்பிப்பது எப்படி?:

www.irctc.com என்ற ஐஆர்சிடிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். நிரப்பிய விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு இந்த விண்ணத்துடன் அசல் சான்றிதழ்களும் எடுத்துச்செல்ல வேண்டும்.

இந்த வேவைவாய்ப்பு பற்றி கூடுதல் தகவல்கள் அறிய விரும்பினால் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை ட்வுன்லோட் செய்து பார்க்கலாம்.

click me!