இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) சேவைக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) சேவைக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், சம்பந்தப்பட்ட துறையில் B.Sc படித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது விவரம் :
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய கூடுதல் விவரங்களை IRCTC அறிவிப்பைப் பார்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
சம்பளம்:
இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
ஐஆர்சிடிசி ஹாஸ்பிடாலிட்டி மானிட்டர்ஸ் பதவிக்கு நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
1, முதலில் www.irctc.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
2, “HR மற்றும் Career” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3, பின்னர் “Recruitment” >> “New openings” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4, அறிவிப்புடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும்.
5, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிடூ செய்ய வேண்டும்.
6, தேவையான ஆவணங்கள் மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட தேதிகளில் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி :
இதற்கான நேர்காணல் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் படிக்க:தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!