குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள சமூக சேவகர் (Social Worker) என்ற வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?
நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு
பணியின் பெயர் : சமூகப்பணியாளர்
பணியிடங்கள் : 01
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.08.2022
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
40 வயதிற்குள் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளமான https://ramanathapuram.nic.in என்ற தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் -623 503 என்ற முகவரிக்கு 20-08-2022 -க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். 20-08-2022, 05.45 பிற்பகலுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு மாதம் ரூ.14,000/ சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு