Income Tax Recruitment 2024 வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!

By Manikanda Prabu  |  First Published Jan 2, 2024, 11:32 AM IST

வருமான வரித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


வருமான வரித்துறை மும்பை பிரிவு, இன்ஸ்பெக்டர், எம்டிஎஸ் மற்றும் பிற பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் incometaxmumbai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 19, 2024 ஆகும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், மொத்தம் உள்ள் 291 காலியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (CoPT) OM எண். 14034/1/95-Estt (D) தேதிகள் 04.05.1995 இல் உள்ள விருப்பத்தேர்வு வரிசையின்படி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

முக்கியமான தேதிகள்


** அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: டிசம்பர் 22, 2023
** விண்ணப்பம் தொடங்கிய தேதி: டிசம்பர் 22, 2023
** விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 19, 2024

தகுதி வரம்பு


இன்ஸ்பெக்டர் மற்றும் வரி உதவியாளர் பணிகளுக்கு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு தேவை, அதே சமயம் ஸ்டெனோகிராபர் கிரேடு-II பதவிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். MTS மற்றும் கேண்டீன் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, பரிந்துரைக்கப்பட்ட வயது வரம்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிக்கான அளவுகோல்கள் உள்ளன.

சொன்னா நம்பமாட்டீங்க.. எழுத படிக்கத் தெரிந்தாலே போதும்.. மாதம் ரூ.50.000 வரை சம்பளம்..!

** இன்ஸ்பெக்டர் பதவிக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். அதற்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

** ஸ்டெனோகிராபர் கிரேடு-II பதவிக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரை ஆகும். இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

** வரி உதவியாளர் (TA) பதவிக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரை ஆகும். இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரி/நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

** மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கான வயது வரம்பு 18 முதல் 25 வரை ஆகும். இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

** கேண்டீன் உதவியாளர் (CA) பதவிக்கான வயது வரம்பு 18 முதல் 25 வரை ஆகும். இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படவுள்ளன. மொத்தம் 291 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்ப்படவுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர் பதவிக்கு 14 பணியிடங்களும், ஸ்டெனோகிராபர் கிரேடு-II பதவிக்கு 18 பணியிடங்களும், வரி உதவியாளர் (TA) பதவிக்கு 119 பணியிடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு 137 பணியிடங்களும், கேண்டீன் உதவியாளர் பதவிக்கு 3 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்


** Income Tax மும்பையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxmumbai.gov.in - க்கு சென்று நேரடி விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்.
** உங்கள் அடிப்படைத் தகவல் மற்றும் தொடர்பு விவரங்களை உள்ளிட்டு உங்கள் கணக்கை பதிவு செய்ய வேண்டும்.
** உங்கள் கணக்கில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
** தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
** நீங்கள் வழங்கிய அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
** எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

click me!