வங்கிகளில் 9995 காலிப் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் ஆர்.ஆர்.பி. தேர்வு அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

By SG Balan  |  First Published Jun 12, 2024, 8:26 PM IST

வங்கிகளில் காலியாக உள்ள 9995 பணியிடங்களை நிரப்புவதற்கான ஐபிபிஎஸ் ஆர்.ஆர்.பி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுத ஜூன் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


கிராமப்புற வங்கிகளில் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 9995 பணியிடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு ஜூலை 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் 110 அதிகாரி பணியிடங்களும், 377 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. PO, கிளார்க், கிரேடு II அல்லது அதிகாரி கிரேடு III அதிகாரியாக பணியாற்ற விரும்புவோர் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் வட்டார கிராமப்புற வங்கிகளில் PO, SO , கிளெர்க் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை வங்கி பணிகளுக்கான தேர்வு மையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான வட்டார கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியாகியுள்ளது.

https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என இரண்டு கட்டங்களாக ஆன்லைனில் நடைபெறும்.

தமிழ்நாடு கிராம வங்கி, ஆந்திரா கிராம வங்கி, கேரளா கிராம வங்கி, கர்நாடகா கிராம வங்கி, அருணாச்சல பிரதேச கிராம வங்கி, சத்திஸ்கர் கிராம வங்கி, குஜராத் கிராம வங்கி, புதுச்சேரி கிராம வங்கி என உள்ளிட்ட 47 கிராம வங்கிகளில் 9995 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தத் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநில மொழி பேசத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள 110 அதிகாரிகள் பணியிடங்களுக்கும், 377 அலுவலக உதவியாளர் பணியிடங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

காலிப் பணியிடங்கள் விவரம்:

அலுவலக உதவியாளர்கள் (பல்நோக்கு): 5585
அதிகாரி கிரேடு I: 3499
அதிகாரி கிரேடு-II (வேளாண்மை அதிகாரி): 70
அதிகாரி கிரேடு-II (சட்டம்): 30
அதிகாரி கிரேடு-II (CA): 60
அதிகாரி கிரேடு-II (IT): 94
அதிகாரி கிரேடு-II (பொது வங்கி அதிகாரி): 496
அதிகாரி கிரேடு-II (மார்க்கெட்டிங் அதிகாரி): 11
அதிகாரி கிரேடு-II (கருவூல மேலாளர்): 21
அதிகாரி கிரேடு III: 129

அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பிரிவினருக்கு 5 முதல் 3 வருடம் வரை வயது வரம்பு தளர்வு உண்டு. கணவரை இழந்த பெண்கள் 38 வயது வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் அனைவரும் இந்த வேலைக்கு முயற்சி செய்யலாம். ஆனால், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரூ.175 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூ.850 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தேர்வு முறை:

அதிகாரி கிரேடு I பணிக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வுக்குப் பிறகு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அலுவலக உதவியாளர்கள் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகாரி கிரேடு II, கிரேடு III பணிக்கும் எழுத்துத் தேர்வுக்குப் பின் நேர்காணல் நடத்தித் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேரவு ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்ததேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பைப் பார்த்துக்கொள்ளலாம்.

click me!