IBPS-யின் 1,828 காலிபணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? எப்போது தேர்வு..? விவரம் இதோ..

By Thanalakshmi VFirst Published Oct 6, 2022, 12:30 PM IST
Highlights

பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 1828 பணியிடங்களான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியமானது (IBPS) அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: பொதுத்துறை வங்கிகள்

காலி பணியிடங்கள்: 1828
 
பணியின் பெயர்: 

IT Officer, Agricultural field officer, Personnel Officer or HR, Marketing Officer , Law Officer மற்றும் Rajbhasha Adhikari ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது காலியாக உள்ள 1,828 பணியிடங்களுக்கு சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 20 - 30க்குள் இருக்க வேண்டும். மேலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது வரம்பில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. 

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் பிரிவினர் கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:எஸ்.எஸ்.சி போட்டி தேர்வு.. காலியாக உள்ள 20,000 பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

கல்வித்தகுதி: 

220 காலி பணியிடங்கள் - IT Officer பணி -  computer science, information technology, electrical, computer application, telecommunication, electronic and communication ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

884 பணியிடங்கள் - Agriculture field officer பணி: பணிக்கு தொடர்புடைய agriculture, veterinary science, horticulture, agriculture engineering, dairy science, fishery science, food technology, agriculture marketing and corporation, sericulture, foresty, agriculture biotechnology, agriculture business management, and dairy technology ஆகிய பிரிவுகளில் 4 ஆண்டு டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

61 பணியிடங்கள் - Personnel Officer or HR பணி: HR/Personal management/social work and labor law ஆகிய பிரிவுகளில் முழு நேர முதுகலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

535 பணியிடங்கள் - Marketing Officer பணி: MMS Marketing, MBA, PGDBA, PGDBM, PGPM, or PGDM(specialization in marketing ) ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

44 பணியிடங்கள்- Law Officer பணி : சட்டத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். 

84 பணியிடங்கள்- Rajbhasha Adhikari பணி: இந்தி, ஆங்கிலம் அல்லது சமற்கிருதம் ஆகிய பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகளில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்வு தேதி: 

அந்தவகையில் முதல்நிலை தேர்வு இந்தாண்டு டிசம்பர் 21 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும் முதன்மை தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

பின்னர் தகுதியானவர்களுக்கு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதியாக ஏப்ரல் 1 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி அல்லது தற்காலிக பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது..? 

முதலில் www.ibps.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

IBPS SO 2022 notification என்பதை கிளிக் செய்யவும்

பின்னர் விண்ணப்ப படிவத்தினை முழுமையாக மற்றும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்களின் புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

“Submit” என்பதை கிளிக் செய்யவும்.

இறுதியாக, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். 

எதிர்கால தேவைக்காக விண்ணப்பதிவை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

மேலும் படிக்க:பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்... விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி? முழு விவரம் உள்ளே!!
 

click me!