GK QUIZ: ஒரே ஒருநாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த நகரம் எது தெரியுமா?

Published : Dec 30, 2024, 02:35 PM ISTUpdated : Dec 30, 2024, 02:36 PM IST
GK QUIZ: ஒரே ஒருநாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த நகரம் எது தெரியுமா?

சுருக்கம்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு பல லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும் நிலையில், 5 GK கேள்வி பதிலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை தங்களது லட்சியமாக கொண்டுள்ளனர். இதனால் ரயில்வே தேர்வு, வங்கி தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். 

எந்த வகையான போட்டித் தேர்வாக இருந்தாலும் GK எனப்படும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். அந்த வகையில் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு உதவியாக 5  GK கேள்வி பதிலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கி இருக்கிறோம்.  

கேள்வி 1: ஒரே நேரத்தில் ஒரு கூடைப்பந்து அணியில் எத்தனை வீரர்கள் விளையாடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

பதில்: ஒரே நேரத்தில்  5 வீரர்கள் ஒரு கூடைப்பந்து அணியில் விளையாடுவார்கள்.

கேள்வி 2: அசாம் மாநிலத்தில் பிஹு பண்டிகை ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கொண்டாடப்படுகிறது என்பது தெரியுமா?

பதில்: அசாம் மாநிலத்தில் பிஹு பண்டிகை ஒரு ஆண்டுக்கு மூன்று முறை கொண்டாடப்படுகிறது. அதாவது ஜனவரி மாதம் மாக் பிஹு என்றும், ஏப்ரல் மாதம் போஹாக் பிஹு என்றும் மற்றும் அக்டோபர் மாதம் கடி பிஹு எனவும் 3 முறை பிஹு பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

கேள்வி 3: ரோச‌ன் குமாரி, ஷோவனா நாராயண் மற்றும் மாயா ராவ் எந்த நடன வடிவத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரியுமா?

பதில்: ரோச‌ன் குமாரி, ஷோவனா நாராயண் மற்றும் மாயா ராவ் ஆகிய 3 பேரும் கதக் நடன வடிவத்துடன் தொடர்புடையவர்கள். கதக் நடனத்தில் சிறந்து விளங்குபவர்கள். இந்திய பாரம்பரிய நடனத்தின் எட்டு முக்கிய வடிவங்களில் கதக் மிகவும் முக்கியமானதாகும். 

கேள்வி 4: கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பதில்: கதக் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்.

கேள்வி 5: இந்தியாவின் எந்த நகரம் ஒரு நாளுக்கு மட்டும் நாட்டின் தலைநகராக மாற்றப்பட்டது?

பதில்: உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் (முன்பு அலகாபாத்) நகரம் 1858ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஒருநாள் மட்டும் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது. 1858ம் ஆண்டு இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து  பிரிட்டிஷ் முடியாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டபோது அலகாபாத் 1858ல் நவம்பர் 1ம் தேதி மட்டும் நாட்டின் தலைநகராக இருந்தது. 

மேற்கண்ட இந்த கேள்விகள் ஏதாவது ஒரு போட்டித் தேர்வில் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இந்த கேள்வி, பதில்களை இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN TRB Assistant Professor: தேர்வர்களே அலர்ட்.. வெளியானது உதவி பேராசிரியர் தேர்வு ஹால் டிக்கெட்! டவுன்லோட் லிங்க் இதோ!
Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!