Job Vacancy: கதவை தட்டும் அதிர்ஷ்டம்.! ரூ.2.5 லட்சம் சம்பளத்துடன் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.!

Published : Nov 26, 2025, 06:20 AM IST
Gail India Limited

சுருக்கம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கெயில் இந்தியா லிமிடெட், 29 காலிப்பணியிடங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. தலைமை மேலாளர், சீனியர் இன்ஜினியர், அதிகாரி போன்ற பதவிகளுக்கு SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். 

கெயில் இந்தியாவில் 29 காலிப்பணியிடங்கள் – ரூ.2.40 லட்சம் வரை சம்பளம் 

மத்திய அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டி அழைக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கெயில் இந்தியா லிமிடெட், நாட்டின் முன்னணி இயற்கை எரிவாயு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தாலேயே நமது வீட்டில் கேஸ் அடுப்பு எரிகிறது என்றால் அது மிகையல்ல. 

 இந்நிறுவனம் எரிவாயு கண்டறிதல் முதல் உற்பத்தி, விநியோகம், மார்க்கெட்டிங் என பல துறைகளில் பெரும்பான்மை பங்காற்றி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பணியாற்றும் வகையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு பணிக்காக காத்திருப்போர் உடனே விண்பிக்கலாம்.

பணியிடங்கள்

தலைமை மேலாளர் – 1

சீனியர் அதிகாரி – 5

சீனியர் இன்ஜினியர் – 8

அதிகாரி – 1

மாற்றுத்திறனாளிகள் பிரிவு – 14

சட்டம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மார்க்கெட்டிங், மெடிக்கல் சர்வீசஸ், மொழி போன்ற பல பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதி & வயது வரம்பு

பணிக்கு தேவையான துறைகளில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், குறைந்தது 1 ஆண்டு அனுபவமும் அவசியம். தலைமை மேலாளர் பதவிக்கு மட்டும் 12 ஆண்டு அனுபவம் தேவை.

வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும்

  • சீனியர் மேனேஜர் – அதிகபட்சம் 46 வயது
  • சீனியர் அதிகாரி – அதிகபட்சம் 33 வயது
  • சீனியர் இன்ஜினியர் – அதிகபட்சம் 38 வயது
  • மருத்துவ சேவை சீனியர் அதிகாரி – அதிகபட்சம் 42 வயது

சம்பள விவரம்

  1. தலைமை மேனேஜர்: ₹90,000 – ₹2,40,000
  2. சீனியர் இன்ஜினியர்/அதிகாரி: ₹60,000 – ₹1,80,000
  3. அதிகாரி: ₹50,000 – ₹1,50,000

தேர்வு முறை

பிரிவுக்கு ஏற்ப எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதி சோதனை, குழு விவாதம் மற்றும் நேர்காணல் போன்ற முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ளவர்கள் gailonline.com இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200 (SC/ST/மாற்றுத்திறனாளி பிரிவினர் விலக்கு). விண்ணப்பங்கள் நவம்பர் 24, 2025 முதல் தொடங்கியுள்ளன; டிசம்பர் 23, 2025 கடைசி நாள். மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்பை எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Training: அட்டகாசமான வாய்ப்பு.! 8th முடித்திருந்தால் போதும்.! ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.!