Job Alert: அனுபவம் தேவையில்லை.! மெக்கானிக்கல் முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.! இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!

Published : Dec 11, 2025, 10:06 AM IST
Job vacancy

சுருக்கம்

ஓசூர் SIPCOT-ல் உள்ள Sunchirin Auto Parts நிறுவனத்தில் புதிய தயாரிப்பு மேம்பாட்டுத் துறையில் (NPD) கிராஜுவேட் இன்ஜினியர் டிரெய்னி (GET) பணியிடங்கள் காலியாக உள்ளன. மெக்கானிக்கல்  முடித்த புதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல் முடித்துள்ளீர்களா.! வாங்க! வேலை இருக்கு!

ஓசூர் SIPCOT பகுதியில் செயல்பட்டு வரும் Sunchirin Auto Parts India Pvt. Ltd., நிறுவனத்தில் GET – NPD (Graduate Engineer Trainee – New Product Development) பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. புதிய தயாரிப்புகள் உருவாக்கும் பிரிவில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக B.E. Mechanical, Automobile Engineering போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும், NPD பற்றிய அடிப்படை அறிவு கொண்ட Degree முடித்தவர்களும் இப்பணிக்கு தகுதியானவர்கள் என நிறுவனம் அறிவித்துள்ளது. புதியவர்கள் (Fresher) முதல் ஒரு ஆண்டிற்குள் குறைவான அனுபவம் கொண்டவர்களுக்கும் இந்த வேலை வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் இதுதான்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,200/- வரையிலான மொத்த சம்பளம் வழங்கப்படும். பணியிடம் ஹோசூர் SIPCOT Phase 1 பகுதியில் அமைந்துள்ளது. தொழில்முறை வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு, மற்றும் ஆட்டோமொபைல் துறையில் நிலையான தொழில் நிலையை உருவாக்கும் சூழல் ஆகியவற்றை இந்த நிறுவனம் வழங்குகிறது. புதிய தயாரிப்புகள் உருவாக்கும் துறையில் தொழில்முறை அனுபவத்தை பெற விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த ஆரம்பம் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு

ஆர்வமுள்ளவர்கள் தங்களது ரெஸ்யூமேவை hr_sapihosur@sunchirin.co.in என்ற மெயிலிற்கு அனுப்பலாம். கூடுதலான தகவல்களுக்கு 82201 39312 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். திறமை கொண்ட இளைஞர்களை தொழில்துறைக்கு வரவேற்கும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை காத்திருக்கு! அரசு சலுகைகளுடன் மாதம்ரூ.1.20 லட்சம் சம்பளம்!
Govt Training: காளான் விதை தயாரித்து மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்க அரிய வாய்ப்பு.! ஒருநாள் பயிற்சி உங்களுக்குத்தான்.!