Govt Job:10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.! எழுத்து தேர்வு இல்லை! Walk-in Interview எப்போ தெரியுமா?

Published : Dec 11, 2025, 06:26 AM IST
Job offer

சுருக்கம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) ராணிப்பேட்டை கிளையில் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன் பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. 

அட்டகாசமான வாய்ப்பு, நேர்முகத்தேர்வுக்கு கிளம்பியாச்சா!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானது பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL). மின் நிலையங்களுக்குத் தேவையான கொதிகலன், மின்கடத்திகள், கனரக உபகரணங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. அதில் ராணிப்பேட்டை பிரிவு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியிட விவரங்கள்

  1. அப்ரென்டிஸ் – வெல்டர் : 45 இடங்கள்
  2. அப்ரென்டிஸ் – ஃபிட்டர் : 45 இடங்கள்
  3. அப்ரென்டிஸ் – எலக்ட்ரீஷியன் : 10 இடங்கள்

இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களே தகுதி வாய்ந்தவர்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான ஒரு வருட பயிற்சி பணியிடமாகும்.

சம்பளம் மற்றும் சலுகைகள்: அப்ரென்டிஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அதுடன் சலுகை விலையில் கேண்டீன் வசதி கிடைக்கும்.

நேர்முகத் தேர்வு விவரம்: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15ஆம் தேதி நேரடியாக நடைபெறும் Walk-in Interview-க்கு வரலாம். இடம்: HRM Conference Hall, Admin Building, BHEL, Ranipet – 632406

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்: 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ சான்றிதழ், ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் (SC/ST/OBC), மாற்றுத்திறன் சான்றிதழ் போன்ற அனைத்து தேவையான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. அரசு பொதுத்துறையில் பணியாற்றும் அனுபவம் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் பெரும் பலனாக இருக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

"சான்றிதழ் வேண்டுமா? 3 மாத சம்பளத்தை வெட்டு.." பேராசிரியர்களை பிணைக் கைதிகளாக்கும் கல்லூரிகள் - பகீர் ரிப்போர்ட்!
"தேர்வே கிடையாது.." இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 2757 காலியிடங்கள்! 12வது படித்திருந்தால் போதும்