மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. கல்வி தகுதிக்கு ஏற்றவாறு வேலைகள் கிடைக்காமால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
இவற்றின் மூலமாக வேலையில்லா பட்டதாரிகள் கணிசமாக வேலை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26 தேதி நடைபெறுகிறது.வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்தமுகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காண காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள தகுதியான இளைஞர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்று வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
அதேபோல நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது, வரும் 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறப் போகிறது. இந்த முகாமில் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கணினி இயக்குபவர், மேலாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கணக்காளர், ஏரியா மேனேஜர். டீம் லீடர், சூப்பர்வைசர், காசாளர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு, தட்டச்சர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு