பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி காலியாக உள்ள வேலைக்கு பணியாளர்களை நியமிக்க உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pnbindia.inவில் அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம். இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் 103 பணியிடங்கள் நிரப்பப்படும்.
மேலும் செய்திகளுக்கு..UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !
தீ பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளின் கீழ் அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோரியுல்ளது. ஆகஸ்ட் 30 தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். காலியிடங்கள்/ஒதுக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையானது, வங்கியின் உண்மையான தேவைக்கேற்ப மாறுபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !
உதவி அலுவலர்கள் மற்றும் Fire Safety அலுவலர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பி.இ. (இளங்கலை பொறியியல்) அல்லது பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.36,000 முதல் ரூ.63,400 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
மேலாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரூ.48,170 வரை ரூ.69,810 வரை வழங்கப்படுகிறது.அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 30.08.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !