மாதம் ரூ.1.12 லட்சம் சம்பளம்.. 764 வேலைகள் ரெடி.. பாதுகாப்புத் துறையில் சேர அருமையான வாய்ப்பு

Published : Dec 14, 2025, 11:34 AM IST
DRDO Recruitment 2025

சுருக்கம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO, CEPTAM மூலம் 764 சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO தனது கீழ் செயல்படும் ஆய்வு நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக CEPTAM (Centre for Personnel Talent Management) மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பின்படி, Senior Technical Assistant (STA)-B மற்றும் Technician-A ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 764 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. STA-B பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், வேதியியல், இயற்பியல், புவியியல், உளவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும், Technician-A பதவிக்கு நியமிக்கப்படுவோர் புக் பைண்டர், கார்பெண்டர், CNC ஆப்ரேட்டர், டிராஃப்ட்ஸ்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற தொழில்நுட்ப டிரேட்களில் பணியாற்றுபவர். சம்பள விவரங்களைப் பார்க்க, STA-B பதவிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும். Technician-A பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தொடர்புடைய பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 28 வயது ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 1 ஆகும். தேர்வு இந்தியாவின் பல நகரங்களில் கணினி வழி தேர்வு (CBT) மூலம் நடத்தப்படும்.

இதற்கிடையே, மத்திய அரசின் கீழ் செயல்படும் Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் திட்ட மேலாளர் பதவிக்கு ஒருவர் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.45,000 சம்பளம் வழங்கப்படும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கணினி அறிவியல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் BE / BTech பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடம் நொய்டா ஆகும். மேலும் விவரங்கள் மற்றும் தகுதிகள் குறித்து அறிய, விண்ணப்பதாரர்களின் அசல் அறிவிப்பை கவனமாகப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு குட் நியூஸ்… RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு
கல்லூரி மாணவர்களே உஷார்! இனி இப்படித்தான் நடக்கும்.. கல்வி முறையில் வரும் மெகா மாற்றம் - முழு விவரம்!