
சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம், மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்:
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2025
முகவரி:
உறுப்பினர் செயலாளர்,
நகர நலவாழ்வு சங்கம்,
பொது சுகாதாரத் துறை,
ரிப்பன் கட்டிடம்,
சென்னை - 600003
மேலும் விவரங்களுக்கு:
சென்னை மாநகராட்சி இணையதளம்: www.chennaicorporation.gov.in
தொலைபேசி எண்கள்: 044-2561 9339, 044-2561 9209
இதையும் படிங்க: TNPSC அதிரடி: 90 நாளில் இத்தனை பேர் தேர்வா?