10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.24000 சம்பளம்.. சென்னை விமான நிலையத்தில் வேலை..

By Ramya s  |  First Published Apr 22, 2024, 3:54 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Utility Agent Cum Ramp Driver 

Tap to resize

Latest Videos

undefined

காலியிடங்கள் : 130

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் வைத்திருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்

வயது வரம்பு : 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளம்.. 8000 வேலைகள் காத்திருக்கு.. ரயில் டிக்கெட் பரிசோதகர் ஆக வாய்ப்பு..

சம்பளம்: ரூ. 24,960 

Handyman / Handywoman

காலியிடங்கள் எண்ணிக்கை : 292

கல்வித்தகுதி : 10-ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் 31 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.22,530

தேர்வு முறை :

இந்த பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று விரும்புவோர் https://www.aiasl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

மொத்தம் 4,660 காலியிடங்கள்... ரயில்வேயில் எஸ்.ஐ, கான்ஸ்டபிள் வேலை.. சம்பளவு எவ்வளவு?

நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :

Office Of The HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 

Utility Agent Cum Ramp Driver : 02.05.2024
Handyman / Handywoman : 04.05.2024

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.aiasl.in/ என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.

click me!