Job Alert: ஐடிஐ முடித்துள்ளவர்களுக்கு அட்டகாச வாய்ப்பு.! மத்திய பாதுகாப்புத்துறையில் தொழிற்பயிற்சி! உடனே விண்ணப்பிக்கனும்.!

Published : Nov 27, 2025, 07:29 AM IST
job vacancy

சுருக்கம்

மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், 2025-ஆம் ஆண்டிற்கான 156 தொழிற்பயிற்சி இடங்களை அறிவித்துள்ளது. ஐடிஐ முடித்தவர்கள் ஃபிட்டர், எலெக்ட்ரிஷியன் போன்ற பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சி முடித்தால் நல்ல சம்பளம் கிடைக்க நல்ல சான்ஸ்

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், 2025ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கான ஏவுகணை, ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை தயாரிக்கும் முக்கிய உற்பத்தி மையமாகும். தற்போது, மொத்தம் 156 தொழிற்பயிற்சி இடங்கள் பல்வேறு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ளன. ஐடிஐ முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கக்கூடிய தொழிற்பிரிவுகள்

  • ஃபிட்டர் – 70 
  • எலெக்ட்ரிஷியன் – 10 
  • எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 30 
  • மெக்கானிஷ்ட் – 15 
  • மெக்கானிஷ்ட் கிரிண்டர் – 2 
  • மெக்கானிக் டீசல் – 5 
  • டர்னர் – 15 வெல்டர் – 4 
  • மொத்தம் – 156 இடங்கள்

வயது மற்றும் தகுதி

 08.12.2025 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 14 முதல் 30 வயது இடையில் இருக்க வேண்டும். ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி வயதில் சலுகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

1961 தொழிற்பயிற்சி சட்டத்தின் அடிப்படையில், 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் கணக்கில் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும். தேர்வான பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

பொருத்தமான தகுதிகள் உள்ளவர்கள் முதலில் BDL இணையதளத்தில் அறிவிப்பை பார்க்கலாம். தொடர்ந்து, www.apprenticeshipindia.gov.in என்ற தளத்தில் ஆன்லைன் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை தேவையான சான்றுகளுடன் சேர்த்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:

Manager (HR) Apprentice,

 Bharat Dynamics Limited, 

Kanchanbagh, Hyderabad – 500058.

  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.12.2025 
  • தபால் மூலம் சென்றடைய வேண்டிய கடைசி நாள் – 12.12.2025

மத்திய அரசின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்தில் தொழில் அனுபவம் பெற விரும்புகிறவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. தொழிற்பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Training: அட்டகாசமான வாய்ப்பு.! 8th முடித்திருந்தால் போதும்.! ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.!