பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பல்வேறு பிரிவுகளுக்கான ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசியாபாத், பஞ்ச்குலா மற்றும் கோட்வாரா இடங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ BEL வலைத்தளத்தைப் பார்வையிடவும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
undefined
சம்பளம் :
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களு ரூ. 21,500 - ரூ. 82,000 + அனுமதிக்கக்கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். (CTC: தோராயமாக ரூ. 5.94 லட்சம்)
இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து BBA/BBM பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய ரயில்வேயில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
பொது, OBC மற்றும் EWS வகைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ₹250 + 18% GST (மொத்தம் ₹295) செலுத்த வேண்டும். இருப்பினும், SC, ST, PwBD மற்றும் முன்னாள் படைவீரர் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வு செயல்முறை திறன் தேர்வு (தட்டச்சு தேர்வு) மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. தட்டச்சுத் தேர்வில் தேர்வர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் 26 நவம்பர் 2024 முதல் விண்ணப்பப் படிவத்தை BEL இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறைக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆவணங்களையும் கட்டண ரசீதையும் பதிவேற்ற வேண்டும்.
வேலை தேடுவோருக்கு சிறந்த நகரம் இது தான்! அதுவும் அதிக சம்பளத்துடன்!
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 18, 2024. விண்ணப்பதாரர்கள் அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருப்பதை உறுதிசெய்து, நிராகரிப்பைத் தவிர்க்க விண்ணப்பச் செயல்முறையை கவனமாக முடிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்ப செயல்முறை தொடக்கத் தேதி : நவம்பர் 26, 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18 டிசம்பர் 2024
கட்டணத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி : 18 டிசம்பர் 2024