
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் பரோடா வங்கி. இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 418 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
வங்கியில் வேலை பணி நிறுவனம்
பேங்க் ஆப் பரோடா
காலியிடங்கள்
இந்தியா முழுவதும் 418 பணியிடங்கள்
பதவி பெயர்
நிபுணர் அதிகாரிSpecialist Officer (IT)
மாத சம்பளம்
ரூ. 48,480 முதல் 1,05,280 வரை
கல்வி தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, M.E/M.Tech, MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
எஸ்.சி./ எஸ்.டி – 5 years, ஓபிசி – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்களுக்கு ரூ.175 கட்டணம். மற்றவர்களுக்கு ரூ. 600 ஆகும்.
தேர்வு செய்யும் முறை
தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் தேதி
ஜனவரி 30
விண்ணப்பிக்க கடைசி தேதி
பிப்ரவரி 19
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://bankofbaroda.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்