டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அப்ளை பண்ணுங்க? வெற்றி பெற்றால் கைநிறைய சம்பளம், தனி கார்! வெற லெவல் லைஃப்!!

By SG Balan  |  First Published Jul 22, 2024, 10:29 PM IST

வரவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில் 17 வேலைகளில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.40,000 க்கு மேல் சம்பளம் கிடைக்கும்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் கடந்த ஜூன் 20ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவகாசம் ஜூலை 19ஆம் தேதியுடன் முடிந்தது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்பவர்களின் வாழ்க்கையில் வெற லெவல் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்தத் தேர்வில் வென்று வேலையில் சேர்ந்தால் தாராளமான சம்பளம் வழங்கப்படும். தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள 18 பதவிகளில் ஒன்றைத் தவிர மற்ற 17 பதவிகளுக்கும் அதிக சம்பளம் வழங்கப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

என்னென்ன பதவிகள்?:

டிஎன்பிஎஸ் குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றால், வனவர், உதவிப் பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், துணை வணிக வரி அலுவலர், பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர், உள்ளிட்ட பல வேலைகளில் சேர முடியும்.

டிஎன்பிஎஸ் குரூப் 2ஏ தேர்வில் வென்றால், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர், ஸ்டெனோ-டைப்பிஸ்ட் , எழுத்தர், தணிக்கை ஆய்வாளர், கல்லூரி வார்டன் உள்ளிட்ட பல பணிகளுக்குச் செல்ல முடியும்.

16 வயசு ஆகிருச்சா? மாதம் ரூ.3,000 வருமானம் கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் சேருங்க!

சம்பளம் எவ்வளவு?:

நகராட்சி கமிஷனர் பணிக்கு ரூ.44,000, சார் பதிவாளர் பணிக்கு ரூ.46,000 ஊதியம் கிடைக்கும். நகராட்சி கமிஷனரை விட சார் பதிவாளருக்கு ஊதியம் அதிகம். ஆனால், நகராட்சி கமிஷனர் பணிக்குத்தான் அதிகாரம் அதிகம். அது மட்டுமின்றி, நகராட்சி கமிஷனராக வேலை கிடைத்தடவுன் தனியாக கார் ஒன்றும் ஒதுக்கப்படும்.

உதவிப் பிரிவு அலுவலர் பணியிலும் ரூ.44,000 சம்பளம் வழங்கப்படும். பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.40,000 ஊதியம் கொடுக்கப்படும். வருவாய் உதவியாளருக்கு ஆரம்ப மாதச் சம்பளம் ரூ.24,000 மட்டுமே கிடைக்கும்.

மாவட்ட நிர்வாகப் பணியில் ஊதியம் குறைவாக இருக்கலாம். ஆனால், அதிகாரம் அதிகமாக இருக்கும். வட்டாட்சியராக பதவி உயர்வும் பெற முடியும். கோட்டாட்சியரில் இருந்து கலெக்டர் லெவலுக்குக் கூட முன்னேறலாம். வரவுள்ள குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வில் 17 வேலைகளில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.40,000 க்கு மேல் சம்பளம் கிடைக்கும்.

சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் கோப்பை! தொடர்ந்து 3வது முறை வென்ற போலீஸ் ஸ்டேஷன்!

click me!