இந்திய விமான நிலைய ஆணையத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்ஸ், சீனியர் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான மொத்தம் 342 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் ஜூனியர் அசிஸ்டெண்ட்ஸ், சீனியர் அசிஸ்டெண்ட்ஸ் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான மொத்தம் 342 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) என்பது இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். தரையிலும் வான்வெளியிலும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல், மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இந்த ஆணையமே பொறுப்பாகும். இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை ஆகஸ்ட் 5, 2023 முதல் தொடங்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.aai.aero என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
undefined
முக்கியமான தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்ப செயல்முறை தொடங்கும் நாள் : 05.08.2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 04.09.2023
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த வடிவில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படிகள்
விண்ணப்பக்கட்டணம்:
பொதுப்பிரிவு, EWS/OBC பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் பல்வேறு பதவிகளுக்கான நியமனம், ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் :
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் :- ரூ.40000 - ரூ. 140000
மூத்த உதவியாளர் ரூ.36000- ரூ. 110000
இளநிலை உதவியாளர்- ரூ.31000 - ரூ. 92000