ஸ்டேட் வங்கியில் வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் பணிகளுக்கு 150 காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதச் சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை. ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பாரத ஸ்டேட் வங்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. 22,542 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். இந்த வங்கியின் மூலமாக அதிகளவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, இந்தியாவிலேயே பெரிய வங்கி என்பது மட்டுமல்ல, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கியும். வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பதும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாதான்.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக கல்வி தகுதி மற்றும் சம்பவம் என்னவென்று பார்ப்போம்.
பணி:
Trade Fianace Officer(MMGS-II)
காலி பணியிடங்கள்:
150
மாத சம்பளம்:
ரூ.64,820 முதல் 93,960
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது டிசம்பர் 31 தேதியின் படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
பணி:
Deputy Manager (Archivist) - 1
தகுதி:
குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் (கி.பி. 1750-க்கு பிந்தைய காலம்) பெற்றிருக்க வேண்டும். காப்பக மேலாண்மை, பொதுப் பதிவு மேலாண்மை, பாதுகாப்பு, மறுபதிவு, தனியார் ஆவணக் காப்பகம், வணிக ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது டிசம்பர் 31 தேதியின் படி 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.bank.sbi/careers அல்லது https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 23