EPF வரிச் சிக்கல்கள்: 30% வரை வரி செலுத்த நேரலாம்! ஜாக்கிரதை!

Published : Jun 20, 2025, 01:03 PM IST
Bank account linked to the EPF account

சுருக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை 5 ஆண்டுகளுக்குள் எடுத்தால், வரி செலுத்த நேரிடும். முழு வரி விலக்கு பெற 5 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரோ அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ மட்டுமே PF தொகையை எடுக்க வேண்டும்.

பணியாளர் நல நிதி (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி முழுவதும் வரி விலக்கு உடையது என நினைப்பது. ஆனால் உண்மையில், சில நிலைமைகளில் PF தொகையை வாபஸ் பெறும் போது 30% வரை வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, தொழிலாளர்களின் குடும்பத்திற்கு எல்லா காலத்திலும் உதவும் முக்கிய நிதியாகும். பல இக்கட்டான சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு கை கொடுத்து உதவும் என்றால் மிகையல்ல.

PF என்பது எப்பொழுது வரிவிலக்கு?

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கு சில சமயங்களில் வரிவிலக்கு கிடைக்காது. அதனை தெரிந்துகொண்டால் பல சிக்கல்களில் இருந்து தப்பிக்கலாம். ஒருவர் பணியாளராக 5 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்த பின் EPF தொகையை முழுமையாக எடுத்து பயன்பெறலாம். இவ்வாறு பெற்ற தொகைக்கு எந்தவித வரியும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ஓய்வு பெறும் போது, கடுமையான உடல்நிலை பிரச்சினை, அல்லது நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்தும் சூழ்நிலையிலும் முழு தொகையை எடுத்து வரிவிலக்கைப் பெறலாம்.

5 ஆண்டுகளுக்குள் PF எடுத்தால் என்ன நடக்கும்?

5 ஆண்டுகளுக்கு முன் EPF தொகையை எடுக்கும்போது, அதை வரி விதிப்பில் இருந்து விடுவிக்க முடியாது. முக்கியமாக, உங்கள் பணியாளர் பங்களிப்பை (employee contribution) Section 80C வாயிலாக வரிவிலக்கு பெற்றிருந்தால், அந்த தொகை வருமானமாகக் கருதப்படும்.நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அதில் பெற்ற வட்டி சம்பளமாக கருதப்படும். உங்கள் பங்களிப்பில் கிடைக்கும் வட்டி "Income from Other Sources" எனும் பிரிவில் வரி விதிக்கப்படும். மேலும், ஒரு வருஷத்தில் PF வாபஸ் பெறும் தொகை ரூ.50,000-ஐ கடந்தால், EPFO 10% TDS (Tax Deducted at Source) ஐ பிடித்து வைக்கும். பான்(PAN) விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், TDS 30% வரை கூட இருக்கலாம்.

PF எப்போது முழுமையாக எடுக்கலாம்?

தொழிலாளர் ஓய்வு பெறும் போது (வயது 58) முழு தொகையை எடுத்து பயன்பெறலாம். 2 மாதங்கள் தொடர்ந்து வேலை இழப்பு ஏற்படும் பட்டசத்தில் முழு தொகையை எடுக்கலாம். அதேபோல் கல்வி செலவு உள்ளிட்ட சில காரணங்களுக்காக பாதியிலும் PF தொகையை எடுக்கலாம்.

  • மருத்துவ தேவைகள்: தானாகவோ குடும்பத்தினருக்காகவோ மருத்துவ சிகிச்சை செலவுக்காக.
  • வீடு வாங்க/கடனை கட்ட: வீடு வாங்குவதற்கோ அல்லது வீட்டுக் கடனை கட்டுவதற்கோ.
  • கல்விக்காக: தன்னுடையோ அல்லது பிள்ளைகளின் உயர்கல்விக்காக.
  • திருமண செலவுக்கு: தன்னுடைய திருமணத்திற்கோ அல்லது குழந்தைகளுக்கோ.

இந்த தொகைகள் EPFO விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், கடந்த காலங்களில் Section 80C-ல் பெற்றிருந்த வரிவிலக்குகளை பாதிக்கக்கூடிய சூழ்நிலை இருந்தால், வரி கட்ட வேண்டியிருக்கும்.

EPF எப்படிப் பெறுவது?

EPFO Portal-க்கு செல்லவும். உங்கள் UAN (Universal Account Number) மற்றும் ஆதார், பான் போன்ற விவரங்களை வழங்கவும்.Withdrawal Claim Form-ஐ Submit செய்யவும். அல்லது நிறுவனத்தின் மூலமாக Withdrawal Form-ஐ சமர்ப்பித்து EPF Offline முறையிலும் பெறலாம்.

NPS – தேசிய ஓய்வூதிய திட்டம் பற்றிய வரி விதிப்புகள்

EPF தவிர, NPS (National Pension Scheme)-ம் ஓய்விற்கான ஒரு முக்கிய சேமிப்பு வடிவமாக இருக்கிறது. இதில்:60% வரை தொகை வரிவிலக்கு, ஓய்வுபெறும் போது. மீதமுள்ள 40% தொகையை Annuity (மாத வருமான திட்டம்) வாங்க பயன்படுத்த வேண்டும். அதிலிருந்து வரும் வருமானம் வரி பொருந்தும். 60 வயதுக்கு முன் வெளியேறினால், மட்டும் 20% மட்டுமே வரிவிலக்கு பெறும்; 80% annuity-க்கு செல்லும்.

5 ஆண்டுகள் முழுமையாக்காமல் PF எடுக்க வேண்டாம் என கூறும் முதலீட்டு ஆலோசகர்கள், அப்படி எடுத்தால், அதிக வரிக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளனர். Section 80CCD(1B) வழியாக NPS-ல் கூடுதல் ₹50,000 வரி விலக்கு பெறலாம் எனவும் Retirement-க்கு பின் Annuity திட்டங்களை திட்டமிட்டு உருவாக்கி பயன் அடையலாம் எனவும் பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

PF என்பது பாதுகாப்பான ஓய்வு சேமிப்பு திட்டமாக இருந்தாலும், தவறான நேரத்தில் அதனை திரும்ப பெறுவது மூலம் வரி சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். எனவே, ஓய்வு திட்டங்களை சிந்தித்துப் பிளான் செய்யுங்கள். முறையான திட்டமிடல் மற்றும் சிறந்த நிதி மேலாண்மை மூலம் PF, NPS ஆகியவை உங்கள் எதிர்கால நிதி நிலையை உறுதிப்படுத்தும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?