வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எப்படி வாக்களிப்பது? பட்டியலில் பெயர் பார்ப்பது எப்படி? நோட் பண்ணுங்க!

By Raghupati R  |  First Published Apr 16, 2024, 11:37 PM IST

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எப்படி வாக்களிப்பது, பட்டியலில் பெயர் பார்ப்பது எப்படி? என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.


வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC) என்றும் அறியப்படுகிறது, இது வாக்களிக்க அனுமதிக்கும் அடையாள வடிவமாக செயல்படுகிறது. ஆனால் ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல மறந்துவிட்டால் என்ன செய்வது? அவர் மீண்டும் வாக்களிக்க முடியுமா? என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 21 மாநிலங்களில் உள்ள 102 இடங்களை பொது மக்கள் வாக்களித்து முடிவு செய்வார்கள்.

இதற்கிடையில், ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க தகுதியுடைய மற்றும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் '18வது வயது' போன்ற பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறது. வாக்களிக்க எந்தெந்த ஆவணங்கள் தேவை, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்ப்பது, வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா? போன்ற கேள்விகள் எழுவது இயல்பான ஒன்றாகும். வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை (Electoral Photo Identity Card (EPIC)) என்றும் அழைக்கப்படும் ஒரு புகைப்பட அடையாள அட்டை.

Tap to resize

Latest Videos

வாக்களிக்க தகுதியுள்ள அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இந்த அட்டை வாக்களிக்க அனுமதிப்பதைத் தவிர, அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. ஆனால் யாரேனும் ஒருவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல மறந்து விட்டால் என்ன செய்வது? இந்தியாவில் தேர்தல்களில் ஒருவர் வாக்களிக்க விரும்பினால், அவர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்களிக்க, அந்த நபர் இந்திய குடிமகனாகவும், தொகுதியில் சாதாரண குடியிருப்பாளராகவும், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம். இதனுடன், வாக்காளர் பட்டியலில் (தேர்தல் பட்டியல்) நபரின் பெயர் இருப்பதும் அவசியம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை அறிய, https://electoralsearch.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்தாலும், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து உங்கள் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையெல்லாம் செய்த பிறகு, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும். ஒவ்வொரு வாக்காளரும் EPIC எண்ணைப் பெறுகிறார்கள். வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் முன் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும்.

நகராட்சி, மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் வாக்களிக்கும்போது இந்த அட்டை பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை மூலம் வாக்காளர்களின் அடையாளம் சரிபார்க்கப்படுவதால், யாரும் மற்றொருவருக்கு வாக்களிக்க முடியாது. ஆனால் தேர்தல் நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்ல ஒருவர் மறந்துவிட்டால் என்ன செய்வது? இன்னும் ஒருவர் வாக்களிக்க முடியுமா? வாக்குச்சாவடிக்கு வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல யாராவது மறந்து விட்டால் அவர்களும் தேர்தலில் பங்கேற்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விதிகளின்படி, வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர, வாக்குச் சாவடியில் காட்டப்படும் பிற ஆவணங்கள் வாக்களிக்க அனுமதி பெறலாம். இந்த ஆவணங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, பான் கார்டு, கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக் (வங்கி-அஞ்சல்), NPR மூலம் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு, MNREGA வேலை அட்டை, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் எம்பி-எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை போன்றவை அடங்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க, தேர்தல் ஆணையத்தின் எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தலாம். இதில் 'ECI (உங்கள் EPIC எண்)' என்று எழுதி 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!