
பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு “குட் நியூஸ்”...”இனி உங்களை தேடி வரும் வேலை“...!!
Linked in இந்த சமூக வலைதளம்,வேலை தேடுபவர் அனைவருக்குமே தெரியும். அதாவது உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக நடத்தப்படும் சமூக வலைதளமான லிங்க்டுஇன் தற்போது புதிய பல வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
பட்டதாரி இளைஞர்கள் பலருக்கும், நல்ல வேலையை தேடிதரும் மேலும் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கேட்டுள்ளது.
`பிளேஸ்மென்ட்’ என்னும் திட்டம் மூலம் ஏஐசிடிஇ அனுமதி பெற்ற கல்லூரிகள் இதில் இணைக்கப்படும் என்றும். இவ்வாறு இணைத்தால், கிராமம், நகரம் என எந்த பாகுபாடும் இல்லாமல் வேலைவாய்ப்பு தேடுவோருக்கு சம வாய்ப்பு உருவாக்கப்படும் என லிங்க்டுஇன் தெரிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவதற்கு, ஆன்லைன் தேர்வு மூலம் இந்தியாவின் முக்கிய 35 கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்த Linkedin நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அக்ஷய் கோத்தாரி, சரியான தகுதி இருக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதுதான் எங்களது இலக்கு என குறிபிட்டுள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.