மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் அல்வா கிண்டுவது ஏன் தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 16, 2024, 7:31 PM IST

ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் பிரமாண்டமான சட்டியில், இந்திய பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிதியமைச்சரே அல்வா கிளறும் பணியைத் தொடங்கிவைப்பார்.


2024 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அல்வா கிண்டும் விழா நடத்த நிதி அமைச்சகம் தயாராக உள்ளது.

2024-25ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் முக்கிய கொள்கை மாற்றங்கள் இருக்கும் எனக் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முக்கிய பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மத்திய பட்ஜெட் பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது வரிச்சலுகைகள் மற்றும் துறைசார் நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவரை விட வயதான அம்பானி குடும்ப மருமகள்கள்! பரம்பரையாகத் தொடரும் வயது வித்தியாசம்!

The final stage of the Budget preparation process for Union Budget 2024-25 commenced with the customary Halwa ceremony in the presence of Union Minister for Finance and Corporate Affairs Smt. , in New Delhi, today. (1/4) pic.twitter.com/X1ywbQx70A

— Ministry of Finance (@FinMinIndia)

அல்வா விழா என்றால் என்ன?

ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் பிரமாண்டமான சட்டியில், இந்திய பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிதியமைச்சரே அல்வா கிளறும் பணியைத் தொடங்கிவைப்பார்.

நிதியமைச்சக அதிகாரிகளின் கடின உழைப்பை உணர்த்தும் வகையிலும் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்குவதைக் குறிக்கும் வகையிலும் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடக்கிறது. அல்வா கிண்டும் நிகழ்வுக்குப் பின் பட்ஜெட் தாக்கல் நடைமுறைகள் முடியும் வரை நிதி அமைச்சகத்தின் எந்த அதிகாரியும் அமைச்சக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

பட்ஜெட் ஆவணங்கள் கசிவு:

1950ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கலுக்கு முன் முக்கிய பட்ஜெட் ஆவணங்கள் கசிந்ததால், அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஜான் மத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு அல்வா கிண்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது.

1980 முதல் நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் கட்டடம் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான பிரத்யேகமான இடமாக இருந்து வருகிறது.

இன்னும் சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அனைவரின் பார்வையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உள்ளது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறார்கள். வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டி விலக்கு மற்றும் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை உற்று கவனிக்கப்படும்.

அம்பானி திருமணத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்! யார் அவர்கள்? என்ன கதி ஆனாங்க தெரியுமா!

click me!