UPI செயலிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளன. சிறந்த அம்சங்களையும் பாதுகாப்பையும் வழங்கும் UPI செயலியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எளிமையான வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், பிற செயலிகள் மற்றும் சேவைகளுடன் ஒருங்கிணைப்பு, பல வங்கி கணக்குகளை இணைக்கும் வசதி, வேகமான பரிவர்த்தனைகள், ஆஃப்லைன் பேமெண்ட் ஆப்ஷன், ரிவார்டுகள், வாடிக்கையாளர் சேவை, பரிவர்த்தனை வரலாறு மற்றும் QR குறியீடு ஸ்கேனிங் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
Unified Payments Interface (UPI) இந்தியாவில் உள்ள மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் முறையை மாற்றியுள்ளது. வங்கிக்குச் செல்லவோ, ரொக்கப் பணத்தைக் கையாளவோ தேவையில்லாமல் ஒரு ஸ்மார்ட்ஃபோன் மூலம் உடனடியாக பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம், பில்களையும் செலுத்தலாம்.
UPI செயலிகள் அதிக பிரபலமடைந்து வருவதால், சிறந்த அம்சங்களையும் பாதுகாப்பையும் வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பயனர்கள் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் திறமையான அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். எனவே, UPI செயலியை டவுன்லோட் செய்யும்போது கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
undefined
1. எளிமையான வடிவமைப்பு
எந்தவொரு UPI செயலியிலும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் எளிமை. நன்கு வடிவமைக்கப்பட்ட user interface (UI) கொண்ட செயலியை தொழில்நுட்ப பரிட்சயம் இல்லாதவர்களும் சிரமமின்றி பயன்படுத்த முடியும். தெளிவான குறிப்புகள், இணக்கமான வடிவமைப்பு மற்றும் எளிய வழிமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட UPI செயலியைத் தேர்வுசெய்ய வேண்டும். இதனால் பயனர்கள் பணம் அனுப்புதல், பில்களை செலுத்துதல் அல்லது பரிவர்த்தனை வரலாற்றைச் சரிபார்த்தல் போன்ற வெவ்வேறு செயல்பாடுகளை சில நொடிகளில் மேற்கொள்ளலாம்.
ஒரு எளிய மற்றும் குழப்பமில்லாத அமைப்பின் மூலம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உருவாக்க முடியும், குறிப்பாக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய வேண்டியிருக்கும் போது. எடுத்துக்காட்டாக, பிரபலமான UPI செயலிகளில் ஒன்றான Bajaj Finserv எளிமையான மற்றும் தெளிவான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது பேலன்ஸ் சரிபார்ப்பு மற்றும் பில் பேமெண்ட் போன்ற முக்கிய அம்சங்களை எளிதாகக் கண்டறிய அனுமதிக்கிறது. ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை சுமூகமாகவும் நேரடியாகவும் வழங்குகிறது.
2. பாதுகாப்பு அம்சங்கள்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கையாளும்போது, பாதுகாப்பு மிக முக்கியமானது. UPI செயலிகள் முக்கியமான நிதித் தகவலைக் கையாளுகின்றன, எனவே நீங்கள் தேர்வு செய்யும் செயலி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
multi-factor authentication (MFA) அம்சத்தைக் கொண்ட UPI செயலிகளைத் தேர்ந்தெடுங்கள். இது பாஸ்வேர்ட் அல்லது PIN க்கு அப்பால் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. இதில் கைரேகை அல்லது முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக்ஸ் மற்றும் பாதுகாப்பான OTPகள் (One-Time Passwords) ஆகியவை அடங்கும். உங்கள் நிதி விவரங்கள் ஹேக்கர்கள் அல்லது சைபர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருக்க என்கிரிப்ஷன் (encryption) அம்சம் இருப்பதும் அவசியம்.
PayTM, PhonePe, Bajaj Pay போன்ற இந்தியாவின் பிரபலமான UPI செயலிகள், மேம்பட்ட என்கிரிப்ஷன் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான PIN அமைப்புகளுடன் வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன. இது பயனர் தரவு நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், உடனுக்குடன் மோசடியைக் கண்டறியும் திறன் சந்தேகத்திற்குரிய செயல்களைக் கண்டுபிடித்து, நிதி இழப்பு ஏற்படுவதற்கு முன்பு அவற்றை தடுக்க உதவுகிறது.
3. பிற செயலிகள் மற்றும் சேவைகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு
உயர்தர UPI ஆப்ஸ் பணப் பரிமாற்றக் கருவியை விட அதிகமாக இருக்க வேண்டும். இது மற்ற சேவைகளுடன் தடையின்றி ஒருங்கிணைந்து இருக்க வேண்டும், பயனர்கள் பணம் செலுத்தவும், மொபைல் ஃபோன்களை ரீசார்ஜ் செய்யவும், டிக்கெட்டுகளை பதிவு செய்யவும் வசதியாக இருக்க வேண்டும். பில் பேமெண்ட் (மின்சாரம், தண்ணீர், கேஸ்), இன்சூரன்ஸ் பிரீமியம், இன்-ஆப் ஷாப்பிங் போன்ற பலதரப்பட்ட வசதிகளைக் கொண்ட UPI செயலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Bajaj Pay மற்றும் Google Pay போன்ற செயலிகள் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS) ஒருங்கிணைப்பு மூலம் பில்களைச் செலுத்த அனுமதிக்கின்றன. அதாவது உங்களின் தொடர்ச்சியான கட்டணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கையாளலாம். கூடுதலாக, இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் பிற பேமெண்ட் கேட்வேகளை இணைக்கும் திறன் பயனர்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை வழங்குகிறது.
4. பல வங்கி கணக்குகளை இணைக்கும் வசதி
UPI செயலியில் பல வங்கிக் கணக்குகளை இணைக்கும் ஆப்ஷன் இருப்பது ஒரு சிறந்த அம்சம். குறிப்பாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் வைத்திருப்பவர்களுக்கு இது பயனுள்ளது. சில UPI செயலிகள் பயனர்கள் பல கணக்குகளைச் சேர்க்க அனுமதிக்கின்றன. இது வெவ்வேறு பரிவர்த்தனைகளுக்கு தேவையான வங்கிக் கணக்கிற்கு மாறுவதை எளிதாக்குகிறது.
தனிப்பட்ட செலவுகள் மற்றும் வீட்டுச் செலவுகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக குறிப்பிட்ட கணக்குகளை ஒதுக்க விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். UPI செயலியை டவுன்லோட் செய்யும்போது, இந்த நெகிழ்வுத்தன்மையை வழங்கும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
5. வேகமான மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகள்
UPI பிரபலமாக இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பரிவர்த்தனைகளை வேகமாக முடிப்பதுதான். நல்ல UPI செயலி, நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, ஆன்லைனில் பொருள்களை வாங்குவது அல்லது பில் செலுத்துவது போன்ற அனைத்து செயல்பாடுகளிலும் எந்த தாமதமும் இன்றி உடனடியாக பணப் பரிமாற்றத்தை நிறைவு செய்யும். இப்படி நம்பகமானதாகவும், பரிவர்த்தனைகள் தோல்வியுறும் அல்லது தாமதமாகும் வாய்ப்பைக் குறைக்கும் வகையிலும் இருக்க வேண்டும். தாமதமாவது செயலியை பயன்படுத்துவதில் வெறுப்பை ஏற்படுத்தும்.
வேகமான பரிவர்த்தனை மற்றும் குறைந்த டவுன்டைம் கொண்ட UPI செயலிகளைத் தேர்ந்தெடுங்கள். Bajaj Pay போன்ற சில செயலிகள், விரைவான பரிமாற்றங்களுக்கு உகந்ததாக உள்ளன. அதிக பரிவர்த்தனைகள் நடக்கும் நேரங்கள் அல்லது பண்டிகைக் காலங்கள் போன்ற பிஸியான காலகட்டங்களில் கூட சுமூகமாக பணம் செலுத்துவதை உறுதிசெய்கின்றன.
6. ஆஃப்லைன் பேமெண்ட் ஆப்ஷன்
பயனர்களுக்கு மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு கிடைக்காத சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இந்த பிரச்சினை வரலாம். இதுபோன்ற சூழலில் ஆஃப்லைன் பேமெண்ட் ஆப்ஷன் இருப்பது கைகொடுக்கும். சில UPI செயலிகள் USSD code அல்லது UPI Lite வாலட்களைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கின்றன. இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தி சிறிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.
இந்த அம்சம் தங்கள் நெட்வொர்க் இணைப்பு குறைவாக இருந்தாலும், சிறிய செலவுகளுக்கு பணம் செலுத்தும் வசதி தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்கிறது.
7. ரிவார்டு, கேஷ்பேக் மற்றும் சலுகைகள்
UPI செயலிகளைப் பயன்படுத்துவதில் மிகவும் உற்சாகமூட்டும் அம்சங்களில் ஒன்று, அவற்றில் வழங்கப்படும் பல்வேறு ரிவார்டு மற்றும் கேஷ்பேக் சலுகைகள். பல UPI செயலிகள் பயனர்கள் தங்கள் செயலியின் மூலம் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க இந்தச் சலுகைகளை வழங்குகின்றன.
பில் பேமெண்ட் மீதான கேஷ்பேக் ஆஃபர்கள், இன்-ஆப் ஷாப்பிங் மீதான தள்ளுபடிகள் அல்லது பண்டிகைக் கால விளம்பச் சலுகைகள் தங்கள் பரிவர்த்தனைகள் மூலம் அதிக பலன்களைப் பெற விரும்பும் பயனர்களை ஈர்க்கும். இந்த வெகுமதிகள் காலப்போக்கில் பணத்தைச் சேமிக்க உதவுவதோடு, செயலியை பயன்படுத்துவதை மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாகவும் மாற்றும்.
8. 24/7 வாடிக்கையாளர் சேவை
எந்தவொரு நிதி சார்ந்த செயலியிலும், பயனர்கள் சிக்கல்களைத் தீர்க்க முடியும் அல்லது சந்தேகங்களுக்கு விரைவாக பதில் பெற முடியும் என்ற உத்தரவாதம் தேவை. தோல்வியுற்ற பரிவர்த்தனைகள், இழந்த நிதிகள் அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்கு நம்பகமான வாடிக்கையாளர் சேவை அவசியம். சிறந்த UPI செயலிகள், சாட்போட்கள், மின்னஞ்சல்கள் அல்லது நேரடி உதவி எண்கள் வழியாக 24 மணிநேரமும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகின்றன.
விரைவான மற்றும் திறமையான வாடிக்கையாளர் சேவையை வழங்குவது பயனர்களின் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர் சேவை அடிப்படையில் சிறப்பாக மதிப்பிடப்பட்ட செயலிகளில் ஒன்று Bajaj Pay. இதில், வாடிக்கையாளர் சேவை செயலியிலேயே வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் நேரடியாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கவும் பரிவர்த்தனைகள் தொடர்பான உதவியைப் பெறவும் அனுமதிக்கிறது. சரியான நேரத்தில் புகார்களுக்கு பதில் அளிக்கப்படுவதும் சிக்கல் விரைவாகத் தீர்க்கப்படுவதும் நம்பகமான UPI செயலியின் முக்கிய அடையாளங்களாகும்.
9. பரிவர்த்தனை வரலாறு மற்றும் நுண்ணறிவு
நன்கு வடிவமைக்கப்பட்ட UPI செயலிகள், பரிவர்த்தனைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், பயனர்களுக்கு விரிவான பரிவர்த்தனை வரலாறுகள் மற்றும் அவர்களின் செலவு பழக்கம் பற்றிய நுண்ணறிவு வழங்கும். இந்த அம்சம் பயனர்கள் தங்கள் செலவுகளைக் கண்காணிக்கவும், ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும், மாதாந்திர செலவுகளை நிர்வகிக்கவும் பயன்படும்.
செயலியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அறிக்கைகள் அல்லது தகவல் சுருக்கத்தை வழங்கும் UPI செயலிகளைத் தேர்ந்தெடுங்கள். சில செயலிகள் பயனர்களின் வரவு செலவுத் திட்டங்களை திறம்பட நிர்வகிக்கவும் செலவுகளை வகைப்படுத்தவும் உதவுகின்றன.
10. QR குறியீடு மற்றும் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்
காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளின் (Contactless payments) பிரபலமாகி வருவதால், UPI செயலிகள், தொந்தரவு இல்லாத பேமெண்ட்டை உறுதிசெய்ய QR குறியீடு ஸ்கேனிங் அம்சத்தை வழங்குவது அவசியம். ஒரு வணிகரின் அல்லது தனிநபரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, கூடுதல் விவரங்கள் எதையும் டைப் செய்யும் தேவையில்லாமலே, உடனடியாகப் பணம் செலுத்தும் வசதி UPI செயலியில் இருக்க வேண்டும்.
கடைகள், உணவகங்கள் மற்றும் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் வழக்கமாக ஏற்கப்படும் பிற இடங்களில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முடிவுரை
சரியான UPI செயலியைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படை செயல்பாடுகள் இருக்கிறதா என்று தேடுவது மட்டும் போதாது. அதை விட அதிகமான அம்சங்கள் தேவைப்படுகிறது. ஒரு நல்ல UPI செயலி, எளிமை, சிறந்த பாதுகாப்பு, பிற சேவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பல்வேறு அம்சங்களையும் வழங்க வேண்டும். தடையற்ற ஆஃப்லைன் பேமெண்ட்டில் தொடங்கி, பல வங்கிக் கணக்குகளை இணைக்கும் வசதி, ரிவார்டு திட்டங்கள், வாடிக்கையாளர் சேவை வரை பல அம்சங்கள் கொண்ட UPI செயலிகள் தினசரி பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான விரிவான தளங்களாக உருவாகியுள்ளன.
Bajaj Finserv BBPS போன்ற தளங்கள் இந்த அம்சங்களைத் திறம்பட ஒருங்கிணைத்து, டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேற்கொள்வதற்கான வசதி, பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் பயனர்கள் விரும்பும் சிறந்த தேர்வாக அமைகின்றன. இந்த அம்சங்களை மனதில் வைத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் டவுன்லோட் செய்யுமர் UPI செயலி உங்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிசெய்யலாம்.