
வங்கியிலிருந்து எவ்ளோ வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்...! புது சட்டம் அமலுக்கு வருகிறது..!!
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ன அறிவித்த பின்பு, மக்கள் தங்களிடம் உள்ள அனைத்து பணமும் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தனர்.
பின்னர், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடப்பட்டது. ஆனால் போதுமான அளவுக்கு பணம் இல்லாததால் , பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஒரு நாளைக்கு ரூ.2000, ரூ.4500, ரூ.10000 பணமெடுக்கலாம் என்று படிப்படியாக வரம்பு உயர்த்தப்பட்டது. இதேபோல் வார உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் இருப்பதால், இதுவரை பணம் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இனி வங்கிகளில் பணம் எடுக்க உச்சவரம்பு இருக்காது என்ற தகவலை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த தகவலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது, பின்னர் அடுத்த மாதம் பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.