
மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் 86 வயதில் புதன்கிழமை இரவு இரத்தன் டாடா காலமானதைத் தொடர்ந்து, நோயல் டாடா டாடா அறக்கட்டளைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நோயல், இரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் நாவல் மற்றும் சைமன் டாடாவின் மகன். அவர் மறைந்த பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் மற்றும் மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரியான அலூ மிஸ்திரியை மணந்தார். டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குடும்பம் 18.4 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. நோயலுக்கு மாயா மற்றும் லியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.