
பீகார் மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக் ஒருவர் தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாடிஃபை செய்து இருக்கிறார். எனினும், இது பார்க்க மட்டுமே ஹெலிகாப்டர் போன்று காட்சியளிக்கும். உண்மையில் இது பறக்காது. மாடிஃபை செய்யப்பட்ட நானோ ஹெலிகாப்டரை திருமண நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விட இதன் உரிமையாளர் திட்டமிட்டு இருக்கிறார்.
மெக்கானிக் குட்டு ஷர்மா உருவாக்கி இருக்கும் நானோ ஹெலிகாப்டர் மற்றும் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களின் படி மாடிஃபை செய்யப்பட்ட டாடா நானோ கார் மாடலின் மேல்புறத்தில் இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் டாடா நானோ கார் பார்க்க ஹெலிகாப்டர் போன்றே காட்சியளிக்கிறது.
டாடா நானோ காரை இவ்வாறு மாடிஃபை செய்ய ரூ. 2 லட்சம் செலவானது என குட்டு ஷர்மா தெரிவித்தார். மாடிஃபை செய்யப்பட்ட நானோ ஹெலிகாப்டரை திருமண நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விட குட்டு ஷர்மா முடிவு செய்து இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றுக்கு நானோ ஹெலிகாப்டருக்கான வாடகை ரூ. 15 ஆயிரம் வரை வசூலிக்க ஷர்மா திட்டமிட்டு இருக்கிறார். முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் நானோ ஹெலிகாப்டரை பயன்படுத்த பலர் ஏற்கனவே முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
"திருமண நிகழ்வுகளுக்கு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. எனினும், இவ்வாறு செய்ய அதிக செலவாகும் எனபதால் அனைவராலும் இதனை பலரும் கனவுடனேயே நிறுத்திக் கொள்கின்றனர். இதன் காணமாகவே எனது டாடா நானோ காரை ஹெலிகாப்டர் போன்று வடிவமைக்க முடிவு செய்தேன். இதை பயன்படுத்தி மக்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்," என ஷர்மா தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.