உணர்வுகளை கிளறியதற்காக வருத்தப்படுகிறோம்... விளம்பரத்திற்காக மன்னிப்புக்கேட்ட தானிஷ்க்..!

Published : Oct 14, 2020, 05:14 PM IST
உணர்வுகளை கிளறியதற்காக வருத்தப்படுகிறோம்... விளம்பரத்திற்காக மன்னிப்புக்கேட்ட தானிஷ்க்..!

சுருக்கம்

காயப்பட்ட உணர்வுகள், எங்களது ஊழியர்கள், கூட்டாளிகள் பணியாளர்களின் நலன் கருதி இந்த விளம்பரப் படத்தைத் திரும்பப் பெறுகிறோம்’என தங்களது விளம்பரத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது தனிஷ் நகை நிறுவனம்.   

காயப்பட்ட உணர்வுகள், எங்களது ஊழியர்கள், கூட்டாளிகள் பணியாளர்களின் நலன் கருதி இந்த விளம்பரப் படத்தைத் திரும்பப் பெறுகிறோம்’என தங்களது விளம்பரத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது தனிஷ் நகை நிறுவனம். 

நகை தயாரிப்பில் ஈடுபட்டு வரும்  டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் ஒரு பிரிவான டனிஷ்க், பண்டிகை காலத்தையொட்டி வெளியிட்ட புதிய விளம்பரப் படத்தில்,  இஸ்லாமியக் குடும்பம் ஒன்று தங்களது இந்து மருமகளுக்காக, இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவதாகவும் அதில் மருமகள் தனது மாமியாரிடம், “இது உங்கள் வீட்டு வழக்கம் இல்லையே”என்றதும், அதற்கு அந்த மாமியார், “எல்லா வீட்டிலும் மகள்களை சந்தோஷமாக வைத்திருத்தல் வழக்கம் தானே”என்று பதில் அளிக்கிறார்.

இந்நிலையில் இந்த விளம்பரம் லவ் ஜிகாதை விளம்பரப்படுத்துகிறது  என்றும் அதனால் டனிஷ்க்கை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுவதாக டனிஷ்க் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பான டனிஷ்க் நிறுவனத்தின் அறிக்கையில், ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில், பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடுவதுதான். எனினும் தற்செயலாக பலரது உணர்வுகளை கிளறியதற்காக வருந்துகிறோம். காயப்பட்ட உணர்வுகள், எங்களது ஊழியர்கள், கூட்டாளிகள் பணியாளர்களின் நலன் கருதி இந்த விளம்பரப் படத்தைத் திரும்பப் பெறுகிறோம்’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஷோபா டே, சேட்டன் பகத் உள்ளிட்ட பலரும் இந்த விளம்பரப் படத்தைப் பாராட்டினர். இந்த விளம்பரத்தில் எந்த தவறும் இல்லை, மிரட்லுக்கு அஞ்சக் கூடாது என்று சேட்டன் பகத் கூறியுள்ளார். இதேபோல், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் தனிஷ்க் ஆதரவு ட்வீட்டுக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். நடிகை கங்கணா ரணாவத் இந்த விளம்பரப் படத்தில் உள்ள கருத்து தவறல்ல என்றும், ஆனால் அது சொல்லப்பட்ட விதம் தவறு என்றும் “ஒரு இந்து மருமகள், தங்கள் குடும்பத்தின் வாரிசைச் சுமக்கும் போது மட்டும் தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

உங்கள் வங்கி கணக்கில் இந்த 10 பரிவர்த்தனைகள் நடந்தால், வருமான வரித்துறையில் மாட்டிக்கொள்வீர்கள்.! எச்சரிக்கை.!
ஹெச்டிஎப்சி வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.! ஏப்ரல் 1 முதல் புதன் கட்டணங்கள்.! வாடிக்கையாளர் கவனத்திற்கு.!