ஹிந்துஜா குழும தலைவர் எஸ்.பி. ஹிந்துஜா 87 வயதில் காலமானார்

By SG Balan  |  First Published May 17, 2023, 10:50 PM IST

ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான ஶ்ரீசந்த் பரமானந்த் ஹிந்துஜா இன்று (புதன்கிழமை) காலமானார். ஹிந்துஜா சகோதரர்களில் மூத்தவரான அவருக்கு வயது 87.


ஹிந்துஜாவின் சகோதரர்கள் நான்கு பேரில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஸ்ரீசந்த் பரமானந்த் ஹிந்துஜா புதன்கிழமை லண்டனில் காலமானார். 87 வயதான அவர் சமீபகாலமாக காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிறந்தது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன், தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் 1935ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் எஸ்.பி. ஹிந்துஜா. இவரும் இவரது சகோதரர்கள், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோரும் ஸ்வீடன் நாட்டு துப்பாக்கி தயாரிப்பாளரான ஏபி போஃபர்ஸ் (AB Bofors) இந்திய அரசின் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உதவினர் என்றும், அதற்காக கிட்டத்தட்ட சட்டவிரோத கமிஷன்களைப் பெற்றனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

Tap to resize

Latest Videos

2023 முதல் 2027 வரை உலக வரலாற்றில் மிக வெப்பமான 5 ஆண்டுகளாக இருக்கும்: ஐ.நா. எச்சரிக்கை

2005 இல் வெளியான தீர்ப்பில் ஹிந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தங்களுடைய சொத்து மதிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் ஹிந்துஜா சகோதரர்கள் குடும்ப சொத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் போராடி வருகின்றனர்.

"கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் ஹிந்துஜா குடும்பம் முழுவதும் எங்கள் குடும்பத் தலைவரும், ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான திரு எஸ். பி. ஹிந்துஜா அவர்கள் இன்று காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்" என்று குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

போஸ்ட் ஆபீஸ் பம்பர் சேமிப்புத் திட்டம்! ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு வட்டி மட்டும் ரூ.2.25 லட்சம்!

click me!