sri lanka economic crisis: இந்தியாவிடம் 100 கோடி டாலருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கடனாக கேட்கும் இலங்கை

Published : Mar 28, 2022, 04:34 PM IST
sri lanka economic crisis: இந்தியாவிடம் 100 கோடி டாலருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கடனாக கேட்கும் இலங்கை

சுருக்கம்

sri lanka economic crisis: இலங்கை மிகமோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து கூடுதலாக 100 கோடி டாலர்களை கடனாகக் கேட்பதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.

இலங்கை மிகமோசமான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவிடம் இருந்து கூடுதலாக 100 கோடி டாலர்களை கடனாகக் கேட்பதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.

உணவுப் பொருட்கள்

இலங்கைக்கு ஏற்கெனவே 100 கோடி டாலர் அளவுக்கு இந்தியா உறுதியளித்துவிட்ட நிலையில் இப்போது கூடுதலாக கடன் அல்லது 100 கோடி டாலர் அளவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்ய இலங்கை கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இது தொடர்பாக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தத் தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரச் சரிவு

இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது. கொரோனாவுக்குப்பின் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததும், தொழில்கள் நசிந்ததும் இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு காரணம். இது தவிர இலங்கைக்கு ஏற்கெனவே ஏராளமான கடன் இருந்தது. அவற்றுக்கான வட்டி ஆகியவையும் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தன.

இதனால் இலங்கையின் அந்நியச்செலாவணி கையிருப்பு 70 சதவீதம் குறைந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 285 ரூபாயாக அதிகரித்தது. பணவீக்கமும் ஆசியாவிலேயேஇல்லாத அளவாக 15 சதவீதமாக உயர்ந்தது.

100 கோடி டாலர் கடன்

இதைச் சமாளிக்க சர்வதேச நிதியடத்திடம் கடன் கேட்கஇலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே கடனுதவி குறித்து இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையில் 100 கோடி டாலர் கடன்இலங்கைக்குவழங்க இந்தியா முன்வந்தது.

உணவுப் பொருட்கள் கடன்

இந்நிலையில் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை, விலை வாசி உயர்வு நிலவுவதால், இந்தியாவிடம் இருந்து 100 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்ய கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறி்ப்பாக அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், அத்தியாவசிய மருந்துகள், கோதுமை மாவு, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு இலங்கை இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. 

ரகசிய பேச்சு

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ இலங்கைக்கு ஏற்கெனவே 100 கோடி டாலர் கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ளது.இதில்கூடுதலாக 100 கோடி டாலர் மதிப்புக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இலங்கை கோரியுள்ளது. இதுதொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளின் பேச்சும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். 


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate: நடுத்தர மக்களுக்கு கிடைத்த குட் நியூஸ்.! அடுத்த 6 மாதத்திற்கு தங்கம் விலை குறித்த கவலை வேண்டாம்.!
தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க